IND vs NZ Final: பதற்றம்! கோலி, ரோகித் அடுத்தடுத்து அவுட்.. இந்தியாவை காப்பாற்றப்போவது யார்?
நியூசிலாந்திற்கு எதிரான இறுதிப்போட்டியில் ரோகித்சர்மா, விராட் கோலி அவுட்டாகிய நிலையில் இந்திய அணியை வெற்றி பெற வைக்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியை வெல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 252 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது.
ப்லிப்ஸ் பிடித்த கேட்ச்:
இந்த நிலையில், இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித்சர்மா அதிரடியான தொடக்கத்தை தந்தார். இதனால், இந்தியாவின் ஸ்கோர் நன்றாக ஏறியது. அவருக்கு சுப்மன்கில் நன்கு ஒத்துழைப்பு தந்தார். இதனால், அணியின் ஸ்கோர் ஏறியது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா அரைசதம் கடந்தார். மறுமுனையில் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு தந்த சுப்மன்கில் அடித்த பந்தை அசாத்தியமாக கேட்ச் பிடித்தார் கிளென் ப்லிப்ஸ்.
ரோகித், கோலி அவுட்:
சுப்மன்கில் 31 ரன்களில் வெளியேற அடுத்து விராட் கோலி வந்தார். அவர் 1 ரன்னில் ப்ராஸ்வெல் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். மிகவும் முக்கியமான விராட் கோலியை 1 ரன்னில் நியூசிலாந்து அணி அவுட்டாக்கினர். அதன்பின்பு, ரோகித் சர்மா - ஸ்ரேயாஸ் ஜோடி நிதானமாக ஆடியது. தொடர்ந்து 2 ஓவர்கள் மெய்டனாகவும் ரோகித் சர்மா அடித்து ஆட முயற்சித்தார். இதனால், ரவீந்திரா பந்தில் அவர் ஸ்டம்பிங் ஆனார். சிறப்பாக ஆடி நம்பிக்கை தந்த ரோகித் சர்மா 83 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் 76 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
காப்பாற்றப்போவது யார்?
105 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்த இந்திய அணி 122 ரன்களுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்தது. இதையடுத்து, இந்திய அணிக்காக ஸ்ரேயாஸ் - அக்ஷர் படேல் ஜோடி சேர்ந்து ஆடி வருகிறது. மைதானம் சுழலுக்கு ஒத்துழைப்பதால் சான்ட்னர், ரவீந்திரா, ப்ராஸ்வெல், ப்லிப்ஸ் மாறி, மாறி பந்துவீசி வருகின்றனர்.
பந்துகளுக்கு ஏற்றாற்போல ரன்கள் தேவை இருப்பதாலும், இன்னும் 7 விக்கெட்டுகள் கைவசம் இருப்பதாலும் வெற்றி வாய்ப்பு தற்போது வரை இந்தியாவின் வசம் பிரகாசமாக உள்ளது. கே.எல்.ராகுல், பாண்ட்யா, ஜடேஜா ஆகிய பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்காக வெளியில் உள்ளனர்.
வெற்றி பெறுவது யார்?
நியூசிலாந்தின் சுழலை சமாளித்து இந்திய அணி சிறப்பாக ஆடினால் நிச்சயமாக சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்ற முடியும்.இதனால், இந்தியாவை வெற்றி பெற வைக்கப்போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இரு அணிகளும் குரூப் ஏ பிரிவில் ஆடியபோது, இதே மைதானத்தில் நியூசிலாந்தை இந்திய அணி வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.