champions trophy IND vs NZ Final: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து:
இதன்படி, ஆட்டத்தைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் நிதானமாக ஆட ரவீந்திரா அதிரடியாக ஆடினார். ரவீந்திரா பவுண்டரிகளாகவும், சிக்ஸரும் விளாச பவர்ப்ளேவில் நியூசிலாந்து அணியின் ரன் ஏறத்தொடங்கியது. இதனால், 6வது ஓவரிலே வருண் சக்கரவர்த்தியை பந்துவீச கேப்டன் ரோகித் சர்மா அழைத்தார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது.
வில் யங்கை 15 ரன்களில் வருண் சக்கரவர்த்தி அவுட்டாக்கினார். இந்திய அணிக்கு குடைச்சல் கொடுத்த ரவீந்திராவை குல்தீப் யாதவ் தான் வீசிய முதல் பந்திலே அவுட்டானார். அவர் 29 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்திலே அபாயகரமான அனுபவ வீரர் வில்லியம்சன் 11 ரன்னில் அவுட்டானார். 75 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி இழந்தது.
போராடிய மிட்செல் - ப்லிப்ஸ் ஜோடி:
அடுத்து ஜோடி சேர்ந்த மிட்செல் - டாம் லாதம் ஜோடி நிதானமாக ஆடியது. டாம் லாதம் நிதானமாக ஆட மிட்செல்லும் மிகவும் நிதானமாக ஆடினார். லாதம் 30 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜடேஜா சுழலில் அவுட்டானார். 108 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணிக்காக மிட்செல் - ப்லிப்ஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியான பேட்ஸ்மேன்கள் என்றாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுவதால் நிதானமாக ஆடினர்.
மிட்செல் - பிலிப்ஸ் ஜோடி ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அனுப்பினர். இதனால், நியூசிலாந்து ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. இந்த ஜோடி நியூசிலாந்து ஸ்கோர் 150 ரன்களை கடந்தது. அவர்களை இந்திய பந்துவீச்சாளர்கள் சுழலில் ரன்கள் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தினர்.
மாயாஜால வருண்:
வருண் சக்கரவர்த்தி, அக்ஷர் படேல், ஜடேஜா, வருண் சக்கவர்த்தி என மாறி, மாறி சுழல் பந்தில் கட்டுப்படுத்தினர். இடையில் கிடைத்த கடினமான கேட்ச் வாய்ப்பை கேப்டன் ரோகித் சர்மா தவறவிட்டார். அதேபோல, ப்லிப்ஸ் தந்த கேட்ச் ஒன்றை பிடித்த பிறகு இளம் வீரர் சுப்மன்கில் தவறவிட்டார்.
நீண்ட நேரமாக இந்திய அணிக்கு குடைச்சல் தந்த இந்த பார்ட்னர்ஷிப்பை வருண் சக்கரவர்த்தி மீண்டும் தனது சுழலால் ஆட்டத்தின் இந்தியாவின் பக்கம் கொண்டு வந்துள்ளார்.
அவர் கிளென் ப்லிப்ஸை தனது சுழலால் போல்டாக்கினார். கிளென் ப்லிப்ஸ் 52 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாக்கினார். நியூசிலாந்த அணி 150 ரன்களை கடந்துள்ள நிலையில், இன்னும் 12 ஓவர்கள் எஞ்சியிருக்கும் நிலையில் அவர்கள் 250 ரன்கள் வரை எட்டுவதற்கு வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. இதனால், மிட்செல், ப்ராஸ்வெல், சான்ட்னர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியதம் அவசியம் ஆகும்.
குல்தீப் அசத்தல்:
கோப்பையை வெல்ல வேண்டியதற்கு வெற்றி நிச்சயம் என்ற நெருக்கடியில் இரு அணிகளும் ஆடி வருகின்றனர். இந்த தொடரில் இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக வருண் சக்கவர்த்தி மாறியுள்ளார். இந்திய அணியின் துருப்புச்சீட்டான அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்றைய போட்டியிலும் அவர் முக்கிய விக்கெட்டுகளை பெவிலியனுக்கு அனுப்பியுள்ளார். ரவீந்திரா, வில்லியம்சன் போன்ற அபாயகரமான பேட்ஸ்மேன்களை குல்தீப் யாதவ் தனது சுழலால் காலி செய்தார்.