இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஆம்ஸ்டீல்வன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி நெதர்லாந்தின் பந்துவீச்சை விளாசி வருகிறது.


தொடக்க வீரர் ஜேசன் ராய் 1 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரர் பிலிப்சால்ட் 122 ரன்களை விளாசினார். அடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மலானும், ஜோஸ் பட்லரும் அதிரடியாக ஆடியதுடன் சதமடித்தும் விளாசியுள்ளனர்.


இந்த நிலையில், டேவிட் மலான் விளாசிய சிக்ஸர் ஒன்று மைதானத்திற்கு வெளியே போய் விழுந்தது.





அப்போது, அந்த பந்தை நெதர்லாந்து கிரிக்கெட் வீரர்களும், மைதான ஊழியர்களும் தேடினர். நமது ஊரில் கண்மாய் அல்லது காடு பகுதிகளில் கிரிக்கெட் விளையாடும் போது பந்தை புதருக்குள் அடித்துவிட்டு இரு அணி வீரர்களும் தேடுவது வழக்கம். அதைப்போலவே, 21ம் நூற்றாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் புதருக்குள் சென்று பந்தை தேடியது கிரிக்கெட் ரசிகர்களுக்கும், மற்றவர்களுக்கும் வியப்பையும், சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த வீடியோவை டுவிட்டர் உள்பட சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் வேறு பந்தே இல்லையா…? சர்வதேச கிரிக்கெட்டில் பந்துக்கு பஞ்சமா..? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இன்னும் சிலர் இது சர்வதேச கிரிக்கெட்டா..? அல்லது சிறுவர்கள் கிரிக்கெட்டா..? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண