கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணிகள் என்கிற பேச்சு பொதுவாக இருக்கும். அவ்வாறு வரும் அணிகளில் நெதர்லாந்து அணியையும் அறியப்படுகிறது. என்ன தான் கத்துக்குட்டி அணியாக இருந்தாலும், நெதர்லாந்து பல நேரங்களில் பல மேஜிக் நிகழ்த்தியுள்ளது. அதற்கு அந்த அணியின் கேப்டன் பங்களிப்பு மிக முக்கியம். அந்த வகையில் கத்துக்குட்டி நெதர்லாந்து அணியை, கட்டி எழுப்பியதில் அந்த அணியின் கேப்டன் பீட்டர் சீலருக்கு பெரும் பங்கு உண்டு.
34 வயதான சீலர், 2005 ம் ஆண்டு நெதர்லாந்து அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார். அவரது சிறப்பான செயல்பாட்டால், 2018 ம் ஆண்டு பீட்டர் போரனிடமிருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார், இடது கை மரபுவழி சுழற்பந்து வீச்சாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சீலர், பேட்டிங்கிலும் அடுத்தடுத்து தன்னை நிரூபித்தார். பவுலராக இருந்த அவர், அடுத்தடுத்து தன்னுடைய பேட்டிங் செயல்பாட்டால் பேட்டிங் வரிசையை உயர்த்தினார்.
நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்காக, 57 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 77 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள சீலர், இரண்டிலும் சேர்த்து தனது அணிக்காக 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். தந்திரமான கோணங்கள் மற்றும் நுட்பமான மாற்றங்களுடன் எதிர் அணிகளை திணறடிப்பதற்காக அறியப்பட்ட சீலர், தனது ODI பொருளாதாரத்தை வெறும் 4.67 ஆகவும், T20I பொருளாதாரத்தை 6.83 ஆகவும் வைத்திருந்தார்.
2009 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் லார்ட்ஸ் மைதானத்திலும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே போட்டியில் பங்களாதேஷிலும் இங்கிலாந்துக்கு எதிராகவும் சிறப்பாக ஆடிய நெதர்லாந்து அணியின் பெரும் பங்களிப்பாளராக சீலர் இருந்தார்.
சீலர், வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாட்டில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்துள்ளார். ஆனாலும் அவரது சிறந்த சாதனை, சிவப்பு-பந்து கிரிக்கெட்டில் தான் இருந்தது. ஐசிசி இன்டர்காண்டினென்டல் கோப்பையில் ஹாங்காங்கிற்கு எதிராக 138 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த போட்டியில் சீலார் மற்றும் பென் கூப்பர் ஆறாவது விக்கெட்டுக்கு 288 ரன்கள் சேர்த்தனர். அது ஒரு சாதனைக் கூட்டணி என்று புகழாரம் சூட்டப்பட்டது.
நெதர்லாந்து அணியின் உயர் செயல்திறன் மேலாளர் ரோலண்ட் லெபெவ்ரே , சீலரின் ஓய்வுக்கு புகழாரம் செலுத்தியுள்ளார்.
"பீட்டரின் உள்ளீடு விலைமதிப்பற்றது, முதலில் ஒரு வீரராகவும் பின்னர் கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்பட்டார். அவரது நிர்வாக பாணி திறந்த, நேர்மையான மற்றும் வெளிப்படையானது, இது எப்போதும் வீரர்களால் பாராட்டப்பட்டது. அவரால் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும். ஆனால், அது துரதிர்ஷ்டவசமாக முடிவுக்கு வந்துள்ளது. அவரது எதிர்காலம் சிறப்பாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்,’’ என்று லெஃபெவ்ரே கூறியுள்ளார்.
தனது ஓய்வு குறித்து சீலர் கூறுகையில் ‛‛2020 ம் ஆண்டு முதல் முதுகுவலி பிரச்சனையால் மிக மோசமாக பாதிக்கபட்டேன். எனது ஓய்வை அறிவிப்பதால் நான் வருத்தப்படுகிறேன். நான் பெற்ற அனைத்தையும் இனி என்னால் கொடுக்க முடியாது,’’ என்று தனது ஓய்வு அறிவிப்பை சோகமாக வெளியிட்டுள்ளார் சீலர்.
சீலர் ஓய்வைத் தொடர்ந்து விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ஸ்காட் எட்வர்ட்ஸ், நெதர்லாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.