ஞாயிற்றுக்கிழமை பெர்த்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 5-வது நாளில், ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை முந்திய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 


அஸ்வினுக்கு முறியடிக்கும் வாய்ப்பு


டிசம்பர் 14-ம் தேதி தொடங்கும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக களம் இறங்கும் போது, லயனை அஸ்வின் முந்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. லியோன் தற்போது 446 விக்கெட்டுகளை வீழ்த்தி, அஸ்வினின் 442 டெஸ்ட் விக்கெட்டுகளை கடந்துள்ளார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் லயன், ஜெர்மைன் பிளாக்வுட்டின் விக்கெட்டை எடுத்து அஸ்வினை சமன் செய்ய, கைல் மேயர்ஸை வெளியேற்றி, டெஸ்ட் வரலாற்றில் எட்டாவது அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றார்.



முத்தையா முரளிதரன்


இவர்களுக்கெல்லாம் முன்னத்தி ஏராக ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உள்ளார். 133 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய அவர், 800 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததுதான். அதுவே பின்னால் அவருடைய ஜெர்சி நம்பராக இருந்ததும், அந்த பெயரிலேயே விஜய் சேதுபதி நடிப்பில் திரைப்படம் வர இருந்து, பல பிரச்சனைகள் காரணமாக நீரித்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்: FIFA World Cup 2022 : "விரைவில் குணமடையுங்கள் பீலே" - பிரேசில் போட்டியின் போது ரசிகர்களின் நெகிழ்ச்சி சம்பவம்


நான்காவது சுழல்பந்துவீச்சாளர்


அவருக்கு பிறகு ஆஸ்திரேலிய லெஜெண்ட், ஷேன் வார்ன் உள்ளார். அவர், 145 டெஸ்டில் 708 விக்கெட்கள் வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் அனில் கும்ப்ளே உள்ளார். அவர் 132 டெஸ்டில் விளையாடி, 619 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். ஆகியோருக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது சுழற்பந்து வீச்சாளராக நாதன் லயன் உள்ளார். அவர் தற்போது 111 போட்டிகளில் 446 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.



வேகபந்துவீச்சாளர்கள்


ஒட்டுமொத்த பந்துவீச்சாளர்களில் 176 போட்டிகளுடன் 668 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆண்டர்சன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஸ்டூவர்ட் ப்ராட் 566 விக்கெட்டுகள் எடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளார். அதன் பிறகு ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்கரத் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் வால்ஷ் ஆகியோர் முறையே ஆறு மற்றும் ஏழாவது இடத்தில் உள்ளனர். 


ஆஸ்திரேலிய அணி வெற்றி


லயனின் விக்கெட்டுகள் பெர்த் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஆஸ்திரேலியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. லியோன் கைல் மேயர்ஸ் (10) மற்றும் கிரேக் பிராத்வைட் (110) இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பினார், அதே நேரத்தில் டிராவிஸ் ஹெட் ஜேசன் ஹோல்டரை (3) வெளியேற்றினார். அதன் பிறகு கேமர் ரோச், ரோஸ்டன் சேஸ் ஆகியோரை வெளியேற்றி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற ஆஸ்திரேலிய அணிக்கு உதவிய லயன் மொத்தம் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.