நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்விக்கு பிறகு, இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதற்கான முதல் போட்டியானது வங்கதேசத்தில் உள்ள டாக்கா மைதனத்தில் பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.
இந்த தொடருக்காக இந்திய அணியில் கேப்டனாக மீண்டும் ரோகித் சர்மா களமிறங்குகிறார். அவரை தொடர்ந்து துணை கேப்டன் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் அணிக்கு திரும்புவதால் இந்திய அணி பேட்டிங் வரிசையில் ஸ்டாராங் ஆகிறது.
இந்தநிலையில், இந்த தொடருக்கு ஒருநாள் முன்னதாக தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகினார். தற்போது அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.
முகமது ஷமி இல்லாத நிலையில் இந்திய அணி 4 பந்துவீச்சாளர்களை களமிறக்கும் கட்டாயத்தில் உள்ளது. முகமது சிராஜ் தற்போது தவிர்க்க முடியாத வீரராக வளர்ந்து வருகிறார். அவரை தொடர்ந்து, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 4வது வேகப்பந்து வீச்சாளராக குல்தீப் சென் இந்த போட்டியில் அறிமுகமாகியுள்ளார். மேலும், இந்திய அணிக்கான ஒருநாள் போட்டியில் குல்தீப் சென் 250 வீரராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்தர போட்டியில் 17 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல், லிஸ்ட் ஏ பொறுத்தவரை 11 போட்டிகளில் 25 விக்கெட்களும், டி20 வடிவத்தில் 20 போட்டிகளில் 22 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷமி போன்ற மூத்த வீரர்கள் இல்லாததால், இது அவருக்கு பிரகாசிக்க வாய்ப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வங்கதேசத்திற்கு எதிரான முதல்போட்டியில் அறிமுகமான குல்தீப் சிங்கிற்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அறிமுக தொப்பியை வழங்கினார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா அணி விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், முகமது சிராஜ், குல்தீப் சென்
வங்கதேச அணி விவரம்:
லிட்டன் தாஸ் (கேப்டன்), அனாமுல் ஹக், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, அபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், எபாடோட் ஹொசைன்