MS Dhoni: அம்பானி வீட்டு திருமண விழா.. ஸ்டைலிஷ் லுக்கில் தல தோனி!

அம்பானி வீட்டு திருமண விழாவில் ஸ்டைலிஷ் லுக்கில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கலந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Continues below advertisement

அம்பானி வீட்டு திருமணம்:

உலகப் பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மும்பையில் கடந்த 12-ம் தேதி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இத்திருமணத்தில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள் வந்து கலந்து கொண்டனர்.

Continues below advertisement

அதோடு பாலிவுட் பிரபலங்கள், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்கள் என திருமணத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. திருமணத்தில் 2,500 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது.

திருமணத்தின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக மணமக்களை ஆசீர்வதிக்கும் `சுப் ஆசீர்வாத்' நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதிலும் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ வேல்டு சென்டரில் நடந்த இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வாதம் செய்தார்.

ஸ்டைலிஸ் லுக்கில் தல தோனி:

 


இந்நிலையில் தான் நேற்றைய நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கலந்து கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது எம்.எஸ்.தோனி செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் அம்பானி இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்ட இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதனைப்பார்த்த ரசிகர்கள் தோனியின் ஸ்டைலிஷ்  லுக் குறித்தும் தல தோனி 40 வயதை கடந்தாலும் இன்னும் இளைமையாக இருக்கிறார் என்றும் சில ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola