MSD: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேரலையில் தோன்றி ரசிகர்களுக்கு ஒரு புதிய விஷயத்தினை சொல்ல விருப்பதாக ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இந்த அப்டேட்டால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். 


இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், உலக கோப்பை நாயகனுமான எம்.எஸ்.தோனி நாளை அதாவது 25/09/2022 அன்று மதியம் 2 மணிக்கு நேரலையில் தோன்றி ரசிகர்களுக்கு ஒரு புதிய விஷயத்தினை சொல்ல விருப்பதாக தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். 






இந்திய அணி டி20 உலககோப்பையை கேப்டன் தோனி தலைமையில்  வென்று இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தோனியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று தோனி அறிவித்துள்ள இந்த அறிவிப்பால், ரசிகர்கள் தோனி 15 ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியா வென்ற டி20 உலககோப்பை போட்டித் தொடர் குறித்து சுவாரஸ்யமான பல தகவல்களை சொல்லுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  


இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் 2007லில் இந்தியா டி20 உலககோப்பை வென்றதை கொண்டாடிய நிகழ்வில், 2007 உலககோப்பையினை வெல்லும் வரையில் தோனி தான் எங்களின் கேப்டன் என நம்பவே முடியவில்லை. அவர் போட்டியின் ஒவ்வொரு இக்கட்டான சூழலிலும் அவர் அனைவரிடத்திலும் ஆலோசனை கேட்டு, ஆவற்றில் எது மிகவும் சிறப்பான ஆலோசனையோ அதனை நாம் பின்பற்றுவோம் என கூறுவார். மேலும், அனைத்து வீரர்களுக்கும் முழு சுதந்திரத்திடன் தங்களின் விளையாட்டினை வெளிப்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குவார் என குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மகேந்திர சிங் தோனியின் இந்த அறிவிப்பை அவரது ரசிகர்கள் பரவலாக பகிர்ந்து வருகின்றனர். 2004 ஆண்டு வங்காள தேசத்துக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். அதேபோல் ஜூலை, 2019 ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியுடன் சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். தோனி தனது சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை, 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,876 ரன்கள் அடித்துள்ளார். மேலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10,773 ரன்கள் விளாசியுள்ளார். மொத்தம் 98 சர்வதேச டி20 போட்டியில் 1617 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் போட்டியை பொறுத்தமட்டில் 234 போட்டியில் 3,682 ரன்கள் விளாசியுள்ளார்.