இந்திய அணிக்கு 2013-ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராஃபி, 2011 ஆம் ஆண்டில் ஒரு நாள் உலகக்கோப்பை, 2007 ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை போன்றவற்றை வென்று கொடுத்து இந்திய ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தவர் எம்.எஸ்.தோனி.
கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு தேர்வான இவர், முன்னதாக கடந்த 2001 முதல் 2003-ஆம் ஆண்டு வரை மேற்கு வங்கத்தின் கரக்பூர் ரயில் நிலையத்தில், டிக்கெட் பரிசோதகராக பணியில் இருந்தவர்.
தோனி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்:
இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், தான் வங்கதேசக் கிரிக்கெட் வீரர்களை எப்படி ஏமாற்றி, களத்தில் உள்ள யுக்திகள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “கரக்பூரில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றியதால் சுற்றி இருப்பவர்கள் பெங்காலியில் பேசினால் என்னால் புரிந்துகொள்ள முடியும். ஒருமுறை வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்துகொண்டிருந்தேன்.
எனக்கு பெங்காலி தெரியும் என்பது அந்த வீரர்களுக்குத் தெரியவில்லை. எப்படி பந்து வீசவேண்டும் என்று கீப்பர் பெங்காலி மொழியில் பவுலருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்.
அதனால் பவுலர் எப்படி பந்து வீசப்போகிறார் என்று முன்கூட்டியே எனக்குத் தெரிந்துவிட்டது” என்று கூறினார்.
ஹே இவருக்கு பெங்காலி புரிகிறது:
தொடர்ந்து பேசிய அவர், “போட்டி முடிந்த பிறகு அவர்கள் பேசுவதைக் கண்டு நான் ரியாக்ஷன் கொடுத்தேன். அப்போது அவர்கள், ’ஹே... இவருக்கு பெங்காலி புரிகிறது’ என்று ஷாக் ஆனார்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலும் பழைய நினைவுகள் பகிர்ந்திருந்தார் எம்.எஸ்.தோனி. அதன்படி, அந்த பேட்டியில்,” நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெற்றுள்ளேன்.
ஐபிஎல் போட்டிகளில் இன்னும் ஓய்வு பெறவில்லை” என்று கூறியிருந்தார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Fastest 100 Wickets: அதிவேக 100 விக்கெட்... பட்டியலில் இணைந்தார் ஷாஹீன் அப்ரிடி... முதல் இடத்தில் யார்? விவரம் இதோ!
மேலும் படிக்க: Mohammed Shami: பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் ஆயுதம்! இந்திய அணியின் எல்லைச்சாமியான முகமது ஷமி!