ஐபிஎல்லில் விளையாடுவாரா தோனி?


இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் எம்.எஸ்.தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் விளையாடி ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார். இச்சூழலில் 18வது ஐபிஎல் சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா இல்லையா என்பது தான் மில்லியன் டாலர்  கேள்வியாக உள்ளது. இச்சூழலில் தான் அண்மையில் ஒரு பேட்டியில் தனது ஓய்வு குறித்து பேசியுள்ளார்.


இது தொடர்பாக அவர் பேசுகையில், "என்னுடைய ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இந்த முறை எத்தனை வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி அளிக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனவே இப்போது எதுவும் நமது முடிவில் இல்லை. எனவே உரிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் நான் எனது முடிவை அறிவிக்கப் போகிறேன்.


அணியின் நலன் கருதி:


ஆனால் அது நிச்சயம் அணியின் நலனுக்காக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வேன்" என்று கூறியுள்ளார். சி.எஸ்.கேவின் நலன் கருதி முடிவு எடுப்பேன் என்று தோனி கூறியிருப்பதன் மூலம் அவர் அடுத்த சீசன் கண்டிப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   முன்னதாக கடந்த 17வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஷி செய்தார். அதேபோல் இந்த முறையும் அவரது கேப்டன்ஷியில் தான் தல தோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






தோனியிடம் உங்களுக்கு பிடித்த பந்து வீச்சாளர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எனக்கு பிடித்தமான பந்துவீச்சாளரை தேர்ந்தெடுப்பது மிகவும் எளிது. ஏனென்றால், அந்த இடத்தில் பும்ரா இருக்கிறார்.


ஆனால், பிடித்த பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். ஏனெனில், நம்மிடம் நிறைய சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். சிறந்த பேட்ஸ்மேன்கள் நிறைய இருக்கிறார்கள் எனக் கூறுவதால், சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது பொருள் கிடையாது" என்று கூறியுள்ளார் தோனி.


மேலும் படிக்க: Shah Rukh Khan: பஞ்சாப் அணி உரிமையாளரிடம் எகிறிய ஷாருக்கான் - ஐபிஎல் ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன?


மேலும் படிக்க: Rinku Singh: "எதிர்பார்க்கவே இல்லை" பந்துவீசியது குறித்து மனம் திறந்த ரிங்குசிங்!