ஐபிஎல் சீசன் 18:
ஐபிஎல் சீசன் 18 அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இதற்கான மெகா ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஏலத்தின் போது பல்வேறு மாற்றங்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதனிடையே, ஐஎபிஎல் அணிகளும் தங்களுடைய தக்கவைக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்க அக்டோபர் 31-ம் தேதியே கடைசி என கூறப்பட்டுள்ள நிலையில், எம்.எஸ்.தோனி அன்-கேப்ட் விதிமுறை மூலம் தக்கவைக்கப்படுவாரா? ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவார இல்லை வேறு அணிக்கு மாற்றப்படுவார என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
ரோஹித் ஷர்மா ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு செல்வார்:
ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்ற முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெருமை சேர்த்த கேப்டன் என்றால் அது ரோஹித் ஷர்மா தான். ரோஹித் ஷர்மா கேப்டனாக பொறுப்பேற்கும் வரை மும்பை இந்தியன்ஸ் அணி ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஆனால் தற்போது அவர்களிடம் 5 கோப்பைகள் இருக்கின்றன.
அவை அனைத்தும் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஸியால் வந்தவை தான்.அப்படி ஒரு வெற்றிகரமான கேப்டனான ரோஹித் ஷர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து ஐபிஎல் சீசன் 17ல் வெளியேற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. இது ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் என்ன மாற்றங்கள் எல்லாம் நிகழும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில், மும்பை அணி ரோஹித்தை வெளியேற்றிவிட்டால் ஏலத்தில் பிட்டிங்-போரே நடைபெறும் என தெரிவித்துள்ளார். அதில், "ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணியால் தக்கவைக்கப்படுவாரா? இல்லையா? என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். ஒருவேளை ரோஹித் ஷர்மா ஏலத்திற்குள் சென்றால், அனைத்து அணிகளும் அவரை அணிக்குள் கொண்டுவர போட்டிப்போடும். அப்படி எந்த அணி அவரை அணிக்குள் தக்கவைக்கப்போகிறது என்பதை பார்ப்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்கும்.
நிச்சயம் ரோஹித் ஷர்மா ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு செல்வார். ரோஹித் ஷர்மா ஒரு தரமான வீரர் மட்டுமில்லாமல் தரமான கேப்டனும் ஆவார். மேட்ச் வின்னராக போட்டியையே திருப்பக்கூடியவர். 37 வயதாகியும், அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் மீதமுள்ளது” என்று ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.