MS Dhoni Birthday: தல தோனி தனது 42வது பிறந்த நாளை தனது செல்லப்பிராணிகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று அதாவது ஜூலை மாதம் 7ஆம் தேதி தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு உலகம் முழுவதும் பலர் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று அவர் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஒன்றாக தனது செல்லப் பிராணிகளுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் வாரி வழங்கி வருகின்றனர்.