கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 23) நடைபெற்று வரும் 22 வது லீக் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் களமிறங்கினர். அதில் 75 பந்துகளில் களத்தில் நின்ற ஷபீக் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 58 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதேபோல், 22 பந்துகள் களத்தில் நின்ற இமாம்-உல்-ஹக் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களது ஜோடி 61 பந்துகளில் 56 ரன்களை சேர்த்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினார். அப்போது 15 வது ஓவரை ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் முகமது நபி வீச ஓடி வந்தார், பாபர் அசாம் தனது கிரீஸை விட்டு முன்னேறினார். அதனை கண்ட முகமது நபி... பாபர் அசாமை பார்த்து, கிரீஸை விட்ட வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார். அப்போது இருவரும் புன்னகையை பகிர்ந்து கொண்டனர். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது