MI-W vs GG-W Live: குஜராத் அணியை மீண்டும் வென்ற மும்பை; 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

MI-W vs GG-W, WPL 2023 LIVE Score: மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபி நாடுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 14 Mar 2023 10:39 PM
விக்கெட்..!

14.5 வது ஓவரில் குஜராத் அணியின் கேப்டன் ராணா ஷிவர் பர்ண்ட்டிடம் எல்.பி.டபள்யூ ஆகி வெளியேறினார். 

விக்கெட்!

11.3வது ஓவரில் குஜராத் அணியின் ஹேமலதா மும்பை அணியின் அமீலா கெர் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். 

மீண்டும் விக்கெட்..!

10வது ஓவரின் முதல் பந்தில் கார்ட்னர் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியுள்ளார். 

விக்கெட்..!

9 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்த ஓவரின் கடைசி பந்தில் நிதானமாக ஆடி வந்த ஹெர்லின் எல்.பி.டபள்யூ முறையில் தனது விக்கெட்டினை பறிகொடுத்து வெளியேறியுள்ளார். 

விக்கெட்..!

தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடி 44 ரன்கள் குவித்த யாஸ்திகா 12வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறியுள்ளார். 

10 ஓவர்கள் முடிவில் மும்பை..!

10 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் சேர்த்துள்ளது. 

7 ஓவர்கள் முடிவில் மும்பை அணி..!

7 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் சேர்த்துள்ளது. 

ஐந்து ஓவர் முடிவில்...

ஐந்து ஓவர் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் சேர்த்துள்ளது. 

நான்காவது ஓவர் முடிவில்..!

நான்காவது ஓவர் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் சேர்த்துள்ளது. 

மூன்றாவது ஓவர் முடிவில்..!

மூன்றாவது ஓவர் முடிவில்  ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் சேர்த்துள்ளது. 

இரண்டு ஓவர் முடிவில்..!

இரண்டாவது ஓவர் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் சேர்த்துள்ளது. 

முதல் ஓவர் முடிவில்.!

முதல் ஓவர் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு ஒரு ரன் சேர்த்து உள்ளது. 

தொடங்கியது போட்டி..!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியது. 

Background

மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2023 இல் ஆரஞ்சு கேப் போட்டி சூடுபிடித்துள்ளன. தொடர் கிட்டத்தட்ட பாதியை கடந்துவிட்ட நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் மெக் லானிங் பல நாட்களாகவே தரவரிசையில் முன்னணியில் இருந்து வருகிறார். ஆனால் அவரது முன்னணி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. பின்னால் வரும் வீராங்கனைகள் அவரை நெருங்கி வருகின்றனர். ஆர்சிபி-யுடனான போட்டியில், ஒன்பதாவது ஓவரில் வெறும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், ரன் எண்ணிக்கை உயரவில்லை. இருந்தபோதிலும், அந்த சீசனில் 200 ரன்களைக் கடந்த முதல் பேட்டர் என்ற பெருமையைப் பெற்ற அவர், தற்போது 221 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.



பெர்ரி இரண்டாவது இடம்


ஆர்சிபி அணி இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டியை கூட வெல்லாத நிலையில், ஆர்சிபியின் எலிஸ் பெர்ரி மட்டும் தனியாக போராடிக்கொண்டிருக்கிறார். அவர் கடைசியாக தோற்ற போட்டியில் அணியை மீட்கும் இன்னிங்ஸ் ஆடி அரை சதம் அடித்த நிலையில், ஆரஞ்சு கேப் பந்தயத்தில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முந்தைய போட்டியில் போட்டியில் தனது முதல் அரைசதத்தை அடித்த அவர் நேற்றும் அரைசதம் அடித்ததால் அவரது ரன் எண்ணிக்கை கணிசமாக முன்னேறி உள்ளது. மேலும் அவர் இப்போது 195 ரன்களுடன் 2 வது இடத்தைப் பிடித்து, லானிங்கிற்கு பின்னால் உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: RCB-W in WPL: பாக்கவே பாவமா இருக்கு.. இறுதிவரை போராடி 5வது தோல்வியை தழுவிய பெங்களூர்..! சோகத்தில் ஆர்.சி.பி. ரசிகர்கள்..!


ஷஃபாலி வர்மா


இதற்கிடையில், இளம் இந்திய அதிரடி வீராங்கனையான ஷஃபாலி வர்மா தனது பட்டாசு பேட்டிங்கால் பெரிதும் பேசப்பட்டு வருகிறார். சமீபத்திய போட்டியில் அவர் கோல்டன் டக் ஆகி இருந்தாலும், ஐந்து போட்டிகளில் 179 ரன்கள் குவித்து தொடரில் இந்திய வீராங்கனைகளில் அதிக ரன்கள் எடுத்தவராக உள்ளார். ஷஃபாலி வர்மாவின் அச்சமற்ற அணுகுமுறை பார்ப்பதற்கு ஒரு விருந்தாக உள்ளது, மேலும் அவர் அடுத்த போட்டியில் மீண்டும் அதிரடியை மீட்க ஆர்வத்துடன் இருப்பார், கண்டிப்பாக ரசிகர்களுக்கு விருந்து கிடைக்கும்.



சரிந்த அலிசா ஹீலி


முந்தைய தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த அலிசா ஹீலி ஒரு இடம் சரிந்து 183 ரன்களுடன் 3வது இடத்தில் உள்ளார். ஹீலி தனது அணிக்காக ஒரு நிலையான செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறார், மேலும் வரவிருக்கும் போட்டிகளில் தனது இடத்தை மேலும் முன்னேற்ற விரும்புவார். மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்ரவுண்டரான ஹேலி மேத்யூஸ், ஆரஞ்சு கேப் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் தொடர்ந்து நீடிக்கிறார். மேத்யூஸ் 166 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணிக்கு ஒரு முக்கிய வீரராக இருந்து வருகிறார் மற்றும் இதுவரை அவர்களின் வெற்றியில் பெரும் பங்கு வகித்துள்ளார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.