இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடிய மனோஜ் திவாரி, தற்போது வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மனோஜ் இந்திய அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மனோஜ் திவாரி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"கிரிக்கெட் விளையாட்டுக்கு குட்பை. இந்த விளையாட்டு எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. நான் என்ன கனவு கண்டேன், இந்த விளையாட்டு எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. சிறுவயதில் இருந்தே எனக்கு பயிற்சி அளித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றி. இவையனைத்தும் எனது சாதனைகளில் முக்கிய பங்கு வகித்துள்ளது. எனது கிரிக்கெட் பயணத்தில் எனது பயிற்சியாளர் மனபேந்திர கோஷ் தூணாக நின்றார். என் பெற்றோருக்கு நன்றி. இருவரும் படிப்புக்காகவோ அல்லது வேறு எந்த வகையிலோ என் மீது அழுத்தம் கொடுத்ததில்லை. என் மனைவிக்கு (சுஷ்மிதா ராய்) நன்றி. எல்லா சூழ்நிலைகளிலும் அவள் என்னுடன் இருந்தார்.






அவருடைய ஆதரவு இல்லாவிட்டால், நான் இன்று இருக்கும் நிலையை வாழ்க்கையில் எட்டியிருக்க முடியாது. எனது பயணத்தில் பங்காற்றிய எனது சக வீரர்கள் மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய உலகில் என்னை கிரிக்கெட் ஆளுமையாக்கிய கிரிக்கெட் ரசிகர்களை எப்படி குறிப்பிடாமல் இருக்க முடியும். என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து மிக்க நன்றி” என பதிவிட்டு இருந்தார். தற்போது இவர் மேற்கு வங்க மாநிலத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மனோஜ் திவாரியின் கிரிக்கெட் வாழ்க்கை:


மனோஜ் திவாரி 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். இருப்பினும், அவர் தனது முதல் போட்டியிலேயே இரண்டு ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகு, அவர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனது அடுத்த போட்டியில் விளையாடினார். 2011 டிசம்பரில் சென்னையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக திவாரி சதம் அடித்தார். இதன் பிறகு அவருக்கு அடுத்த 14 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம் மனோஜ் திவாரி கடைசியாக 2015ல் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா சார்பில் விளையாடினார். 


மனோஜ் திவாரி இந்தியாவுக்காக மொத்தம் 12 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில், திவாரி 26.09 சராசரியில் 287 ரன்கள் எடுத்தார், இதில் ஒரு சதம் மற்றும் அரை சதம் அடங்கும். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக திவாரி தனது ஒரே சதத்தை (104*) அடித்தார். திவாரி சர்வதேச ஒருஒரு நாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். சர்வதேச டி20 போட்டியில் மனோஜ் திவாரி 15 ரன்கள் எடுத்துள்ளார் 


மனோஜ் திவாரி 141 முதல் தர போட்டிகளில் விளையாடி 48.56 சராசரியில் 9908 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 29 சதங்கள் மற்றும் 45 அரை சதங்கள் அடங்கும். மனோஜ் திவாரியின் லிஸ்ட்-ஏ வாழ்க்கையும் சிறப்பானதாக இருந்தது. லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் திவாரி 5581 ரன்கள் எடுத்தார். இதன் போது அவர் 6 சதங்களும் 40 அரை சதங்களும் அடித்துள்ளார். டி20 வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், திவாரி 183 போட்டிகளில் மொத்தம் 15 அரை சதங்களுடன் 3436 ரன்கள் எடுத்தார்.