90’ஸ் கிட்ஸின் பெரும்பாலானோருக்கு பியர் கிரில்ஸ் என்ற பெயர் ஒரு நிஜ ஹீரோவை போலதான். காடு, மழை, பனி பிரதேசங்கள், பாலை வனங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்கள் எப்படி உயிர் பிழைத்து வாழ வேண்டும் என்பதை செய்து காமிப்பார்.
வாழ முடியாத இடங்களில் உணவு இல்லாத பட்சத்தில் அங்கு எப்படி உணவை சாப்பிடுவது, அசுத்த தண்ணீரை நல்ல தண்ணீரை எப்படி மாற்றி அருந்துவது என அனைத்தையும் தெளிவாக சொல்லிக்கொடுப்பார். இப்படி 90’ஸ் கிட்ஸின் ஹீரோவான பியர் கிரில்ஸ், கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மேனாக களமிறங்கி சிக்ஸரும், பவுண்டரிகளாக அடித்தால் எப்படி இருக்கும். ஆனால், அப்படி ஒரு போட்டியில் பியர் கிரில்ஸ் விளையாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டிஸ்கவரி சேனலில் சர்வைவர் தொலைக்காட்வித் தொடரான மேன் vs வைல்டின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸுடன் இணைந்து பண்ட் (தொண்டு) நிறுவன போட்டியில் கிரிக்கெட் விளையாடுவதை காண முடிந்தது. இன்ஸ்டாகிராம் வழியாக ரூத் ஸ்ட்ராஸ் அறக்கட்டளையால் பகிரப்பட்ட வீடியோவில், பியர் கிரில்ஸ் மற்றும் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்தனர். அப்போது பியர் கிரில்ஸ் சிக்சரும், பவுண்டரியுமாக அடித்த அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆச்சரியப்படும் விதமாக, பியர் கிரில்ஸ் போட்டியின்போது ஸ்லாக் ஸ்வீப், கவர் டிரைவ் மற்றும் ஸ்கொயர் கட் உள்ளிட்ட சில நேர்த்தியான ஷாட்களை விளையாடினார். இந்த தொண்டு நிறுவன போட்டியில் முன்னாள் இலங்கை கேப்டன் குமார் சங்கக்கார மற்றும் முன்னாள் இங்கிலாந்து வீரர் இயன் பெல் போன்றவர்களும் விளையாடினர்.
ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
இடது கை பேட்ஸ்மேனான ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் இதுவரை இங்கிலாந்துக்காக 100 டெஸ்ட், 127 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், இங்கிலாந்து அணிக்காக 50 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இவரது தலைமையின்கீழ் இங்கிலாந்து அணி 24 வெற்றிகளையும் 11 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து நம்பர்.1 டெஸ்ட் தரவரிசையை கைப்பற்றியது. தொடர்ந்து, 2010-11ல் இங்கிலாந்துக்கு ஆஷஸ் அணிக்கு தலைமை தாங்கியது ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மற்றொரு சாதனையாகும்.
2012 இல் இங்கிலாந்து வீரர்கள் தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் தொடர் தோல்வியை சந்தித்தபோது ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 47 வயதான இவர் இங்கிலாந்து கிரிக்கெட்டின் இயக்குநராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.