ஐபிஎல் சீசன் 18:


ஐபிஎல் சீசன் 18 அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக டிசம்பர் மாதம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. முன்பை விட சீசன் 18ல் பல்வேறு மாற்றங்கள் நடைபெறலாம் என்ற நிலை தான் உள்ளது. அந்தவகையில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ரோஹித் ஷர்மா ஆகியோர் அவர்கள் விளையாடிய அணிகளிலேயே தக்கவைக்கப்படுவார்களா அல்லது அணியில் இருந்து விடுவிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 


லக்னோ அணியின் ஆலோசகராகும் ஜாகீர் கான்:


முக்கியமாக ஒவ்வொரு அணிகளும் தங்களது அணியின் வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர்களையும் மாற்றும் யோசனையில் தான் உள்ளது. அதன் ஒருபகுதியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் தங்கள் பணிகளை செய்துவருகிறது. அதன்படி பல்பேறு குழப்பங்களுக்கு இடையில் முதல் அணியாக தங்களது ஆலோசகரை மற்றும் முனைப்பில் இருக்கிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.


 இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை அணியின் ஆலோசகராக நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லக்னோ அணி நிர்வாகம் விரைவில் வெளியிடும் என்றும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேற்கொண்டு அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மோர்னே மொர்க்கல் தற்சமயம், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 


இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் குறித்த அறிவிப்பையும் விரையில் வெளிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் தற்போதைய பயிற்சியாளர்கள் இடத்தில் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கரும், துணை பயிற்சியாளர்களாக ஆடம் வோஜஸ், லான்ஸ் க்ளூஸ்னர், ஜான்டி ரோட்ஸ், ஸ்ரீதரன் ஸ்ரீராம் மற்றும் பிரவின் டாம்பே ஆகியோர் உள்ளனர்.