Lendl Simmons Retirement: அதிரடி மன்னன் லென்டி சிம்மோன்ஸ் ஓய்வு..! வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் அதிர்ச்சி..!

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாகி லென்டி சிம்மோன்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Continues below advertisement

மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் லென்டி சிம்மோன்ஸ். மேற்கிந்தியதீவுகள் அணிக்காக பல இக்கட்டான நேரத்தில் சிறப்பாக ஆடி வெற்றியைத் தேடித்தந்த சிம்மோன்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Continues below advertisement


வலது கை ஆட்டக்காரரான 37 வயதான சிம்மோன்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 278 ரன்களை எடுத்துள்ளார். 68 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3 முறை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 2 சதங்களையும், 16 அரைசதங்களையும் விளாசியுள்ளார். ஒருநாள் போட்டியில் மட்டும் அவர் 1958 ரன்களை எடுத்துள்ளார். 68 டி20 போட்டிகளில் ஆடியுள்ள சிம்மோன்ஸ் 9 அரைசதங்களுடன் 1527 ரன்களை எடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் 29 ஆட்டங்களில் ஆடி 1 சதம் மற்றும் 11 அரைசதங்களுடன் 1079 ரன்களை குவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் பிறந்தவர். சர்வதேச போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஆடிய சிம்மோன்ஸ் உலகெங்கும் நடைபெற்ற முன்னணி லீக் போட்டிகளில் பங்கேற்றும் ஆடியுள்ளார்.


ப்ராம்ப்டோன் வோல்வ்ஸ், ப்ராவோ லெவன், பிரிஸ்பேன் ஹீட், சட்டோக்ரம் சேலஞ்சர்ஸ், தம்புல்லா வைகிங், கியானா அமேசான் வாரியர்ஸ், ஜமைக்காக டல்லவாஸ், கராச்சி கிங்ஸ், குல்னா டைட்டன்ஸ், மராத்தா அரேபியன்ஸ், நார்தர்ன் வாரியர்ஸ், பெஷாவர் ஜல்மி, ராஜ்சாஹி ராயல்ஸ், செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பாட்ரியாட்ஸ், செயின்ட் லூசியா ஸ்டார்ஸ், சில்ஹெட் சன்ரைசர்ஸ், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், டிரினிடாட் டொபோகோ, வின்னிபெக் ஹாக்ஸ் அணிகளுக்காக ஆடியுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியுள்ளார்.

லீக் போட்டிகள் உள்பட இவர் இதுவரை மொத்தம் 292 டி20 போட்டிகளில் ஆடி 7 ஆயிரத்து 756 ரன்களை விளாசியுள்ளார். அவற்றில் 2 சதங்களும், 59 அரைசதங்களும் அடங்கும். சிம்மோன்சின் ஓய்வு அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola