காயத்தால் அவதிப்பட்டு வரும் கேஎல் ராகுல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தகவல் தெரிவித்துள்ளது. 


தற்போது இந்திய இளம் அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டனாக தொடக்க வீரர் கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டு இருந்தார். தொடர் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன், கேப்டன் கே.எல் ராகுல் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக இந்திய அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 


இந்தநிலையில், இந்தியாவின் அனுபவ அணியான ரோஹித் சர்மா தலைமையிலான அணி வருகிற ஜூலை 1 ம் தேதி இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட கே.எல் ராகுல் விளையாடமாட்டார் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. 




இந்திய தொடக்க ஆட்டக்காரும், துணை கேப்டனுமான கேஎல் ராகுல் இடுப்புக் காயம் காரணமாக ஜெர்மனிக்கு செல்ல இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து, இந்தியா ஏழு ஆட்டங்களில் விளையாடும் இங்கிலாந்து பயணத்தைத் தவறவிடுகிறார்.


"எடப்பாடி துரோகி.. OPS-ஐ அசைக்க முடியாது"உண்மையை உடைத்து பேசிய SPL.. வீடியோவை முழுமையாக காண : 



இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வியாழக்கிழமை தெரிவிக்கையில், "ராகுல் தனது இடுப்பு காயத்தில் இருந்து மீளவில்லை. டெஸ்ட் அணி வீரர்கள் இன்று மும்பையில் இருந்து கிளம்பியுள்ளது. ராகுல் அணியுடன் பயணம் செய்யவில்லை. அவர் உடல் தகுதி தேர்வில் தேறினாலும் அவர் குணமடைய இன்னும் சிறிது நேரம் எடுக்கும். எனவே, ராகுல் தனது இடுப்பு காயத்தை சரி செய்ய விரைவில் ஜெர்மனி செல்ல இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.


இன்று காலை எட்ஜ்பாஸ்டனில் ஜூலை 1-5 டெஸ்ட் போட்டிக்கான வீரர்களைக் கொண்ட இந்திய அணி மும்பையில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்பட்டது. அந்த குழுவில் கேஎல் ராகுல் இடம்பெறவில்லை. கேஎல் ராகுலுக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் இடம் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


இருப்பினும், கேஎல் ராகுலுக்கு பதிலாக இந்திய அணியின் துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்று இதுவரை தெரியவில்லை. இதுவரை 43 டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 56 டி20 போட்டிகளில்  விளையாடியுள்ள கேஎல் ராகுல் கடந்த பிப்ரவரி முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. ஆனால், ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்தவர்களில் இரண்டாவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண