ஐபிஎல் சீசன் 18:


ஐபிஎல் சீசன் 17ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால் அந்த அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை மைதானத்திலேயே வைத்து திட்டினார். இது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து சஞ்சீவ் கோயங்கா அவ்வாறு நடந்து கொள்வது கிரிக்கெட்டில் எதார்த்தமானது என்று கூறியிருந்தார்.


இச்சூழலில் தான் வரும் ஐபிஎல் சீசன் 18ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து  கே.எல்.ராகுல் விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், 2025 ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் லக்னோ அணியில் இடம் பெற உள்ளது உறுதியாகி இருக்கிறது. ஆனால், அவர் கேப்டனாக இருக்கப் போவதில்லை.


அடுத்த கேப்டன் யார்?


லக்னோ அணியில் தன் ஒரு வீரராக மட்டும் இடம் பெற விரும்புவதாக கே.எல். ராகுல் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அப்படி அவர் ஒரு வீரராக மட்டும் இருக்கும் பட்சத்தில் க்ருணால் பாண்டியா மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகிய இரண்டு வீரர்களில் யாரவது ஒருவர் கேப்டன் பொறுப்பை ஏற்க வாய்ப்பு உள்ளது.


இது தொடர்பாக லக்னோ அணி சார்பில் கூறுகையில், "நேற்று தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் கோயங்காவுடனான சந்திப்பு அதிகாரப்பூர்வமானது, கேப்டன் மற்றும் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கலாம் என்று விவாதிக்கப்பட்டது.  இருப்பினும், வரவிருக்கும் சீசனில் ராகுல் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் அவர் ஒரு பேட்டராக தன்னை மேலும் மேம்படுத்த விரும்புகிறார்.. கோயங்காவுக்கு ராகுல் மீது முழு நம்பிக்கை உள்ளது, மேலும் அவர் ஒரு வீரராகத் தக்கவைக்கப்படுவார், ஆனால் அணிக்கு கேப்டனாகக் காணப்பட மாட்டார்” என்று கூறுகின்றனர்.