இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது குழந்தை பருவ நண்பரான வினோத் காம்ப்ளியை கட்டியணைக்கும்  வீடியோ இணையத்தில் வைரலாக பரப்பட்டு வருகிறது. 


வினோத் காம்ப்ளி: 


லிட்டில் மாஸ்டர் சச்சினின் பள்ளிக்கால நண்பரான வினோத் காம்ப்ளி ஒரு காலத்தில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார், இவருடைய பள்ளி பருவத்தில் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து அடித்த 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் அவரை உலக அளவில் பிரபலப்படுத்தியது. 


மேலும் சச்சினுக்கு பிறகு வினோத் காம்ப்ளி தான் என்று சொல்கிற அளவுக்கு இவருடைய ஆட்டம் இருக்கும், அன்றைய காலக்கட்டத்தில் ஷேன் வார்னேவின் பந்து வீச்சை விளையாட  எல்லாரும் திணறிய நிலையில் காம்ப்ளி வார்னேவின் ஒரே ஒவரில் 22 ரன்கள் அடித்து புகழின் உச்சிக்கே சென்றார். 


இதையும் படிங்க: Mohammed Shami: கம்பேக் கொடுக்க தயாரான முகமது ஷமி - காயங்கள் ஓவர், 11 நாட்களில் 6 டி20 போட்டிகள் - ஆஸி., பறக்கிறாரா?


ஆனால் என்னத்தான் புகழின் உச்சிக்கு சென்றாலும் இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்தது. காம்ப்ளிக்கு போதைப்பழக்கம், ஒழுக்கமில்லாமல் நடப்பது எனப் பல்வேறு புகார்கள் காம்ப்ளி மீது வைக்கப்பட்டது. இதனால் இந்திய அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் ஓரங்கட்டப்பட்டார் காம்ப்ளி. கடைசியாக  அவர் இந்திய அணிக்காக 2000-ஆம் ஆண்டு  தான் விளையாடினார். 


அதன் பிறகு பெரிதாக இந்திய அணியின் ராடாரில் இல்லாமல் இருந்த காம்ப்ளி 2009ஆம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறு

வதாக அறிவித்தார். மேலும் சமீபத்தில் கூட தனக்கு யாரும் உதவவில்லை என்றும், தனது நிலைமை மிக மோசமானதாக இருப்பதாகவும் தனக்கு ஒரு வேலை வேண்டுமென பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்தார். 


சச்சின்-காம்ப்ளி சந்திப்பு:


இந்த நிலையில் சச்சின் மற்றும் வினோத் காம்ப்ளியின் இளமை கால பயிற்சியாளரான  ரமாகாந்த் அச்ரேக்கருக்கு நினைவு சின்னம் திறந்து வைக்கும் விழாவானது நடத்தப்பட்டது. இந்த விழாவில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளி ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். அப்போது காம்ப்ளி ஏற்கெனவே மைடையில் அமர்ந்திருந்தார். வினோத் காம்ப்ளியை சச்சின் கண்டவுடன் அவரை நோக்கி சென்று கைகளை குலுக்கினார். அதன் பின் நீண்ட நேரம் சச்சினின் கைகளை விடாமல் அப்படியே இருந்தார். அதன் பின்னர் சச்சின் அவரை ஆரத்தழுவத் கட்டியணைத்து தலையை அன்புடன் கை வைத்து தட்டிச் சென்றார். நீண்ட நாட்களுக்கு இருவரும் நேரில் சந்தித்து கொண்ட நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.






இந்த நினைவு நிகழ்வில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும்  அச்ரேக்கரின்  மாணவர்களான பராஸ் மாம்ப்ரே, பிரவின் ஆம்ரே, பல்விந்தர் சிங் சந்து, சமீர் டிகே மற்றும் சஞ்சய் பங்கர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.