இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து விலகினார். அதன்பின்னர் அவர் இங்கிலாந்து தொடரிலும் பங்கேற்கவில்லை. அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய அவர் ஐரோப்பா சென்று இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது என்று பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில் தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு கே.எல்.ராகுல் மீண்டும் பயிற்சி செய்வது போல் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில், அவர் மெதுவாக பேட்டிங் பயிற்சி செய்வது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 






இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். அத்துடன் பல கிரிக்கெட் வீரர்களும் இதை லைக் செய்துள்ளனர். மேலும் கே.எல்.ராகுல் வேகமாக குணம் அடைந்து மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து தொடருக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அந்தத் தொடருக்கான அணியிலும் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை. அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரிலும் இவர் பங்கேற்கும் வாய்ப்பு குறைவு என்று கருதப்படுகிறது. ஏனென்றால் இவர் காயத்திலிருந்து முழுமையாக குணம் அடைய 6 வாரங்கள் வரை தேவைப்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆகவே அவர் ஆசிய கோப்பை வரை இந்திய அணியில் இடம்பெறுவது கடினம் என்று கருதப்படுகிறது. 


ஐபிஎல் தொடருக்கு பிறகு கே.எல்.ராகுல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. எனவே விரைவில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பெறவேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண