இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. அதன்பின்னர் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியை இந்திய மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.


 


இந்நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய மகளிர் அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (75), பூஜா வத்சரேக்கர்(56*), ஷெஃபாலி வெர்மா(49) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்காரணமாக இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் சமரி அட்டப்பட்டு, ரஷ்மி,தில்ஹாரா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். 


 






256 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை மகளிர் அணி களமிறங்கியது. இலங்கை அணியில் சமரி அட்டப்பட்டு(44),நிலாக்‌ஷி டி சில்வா(48), ஹாசினி பெரேரா(39) ஆகியோர் மட்டும் ஒரளவு தாக்குப்பிடித்தனர். மற்ற இலங்கை வீராங்கனைகள் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். இறுதியில் 47.3 ஓவர்களில் இலங்கை அணி 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது. இந்தியா தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட் 3 விக்கெட்களையும், மெக்னா மற்றும் பூஜா தலா 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று இலங்கை மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்தது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண