டாக்காவில் உள்ள ஷேரே பங்களா தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்டில் ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச தேசிய கிரிக்கெட் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய தேசிய கிரிக்கெட் அணி. டெஸ்ட் போட்டியின் வெற்றியின் மூலம், இந்தியா மதிப்புமிக்க ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
கே.எல்.ராகுல் பார்ம்:
என்னதான் இந்திய அணி கேஎல் ராகுல் தலைமையில் தொடரை வென்றாலும், கேஎல் ராகுல் பார்ம் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை கருத்தில்கொண்டு கேஎல் ராகுல் நீக்கப்படலாம் என தெரிகிறது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த டெஸ்ட் தொடரில் அவருக்குப் பதிலாக இந்தியா அணிக்கு புதிய தொடக்க வீரர்களை முயற்சிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
அடுத்த தொடருக்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் கேஎல் ராகுலுக்குப் பதிலாக தொடக்க ஆட்டக்காரராக வரக்கூடிய இரண்டு வீரர்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
ரோகித் சர்மா :
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக பங்கேற்கவில்லை . இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அனைத்து முக்கியமான தொடருக்கு அவர் தகுதி பெறுவார் என்று பிசிசிஐ நம்புகிறது. சமீபத்தில் ஷுப்மான் கில் சிறப்பாக செயல்பட்டுள்ள நிலையில் , கே.எல்.ராகுல் பார்ம் அவுட் காரணமாக, ரோகித் தான் தொடக்க வீரர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
ரோகித் சர்மாவும் கடந்த சில தொடர்களாக ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். டெஸ்ட் தொடரில் மட்டுமல்ல அனைத்து வடிவங்களிலும், இந்தியா கேப்டன் ரோகித் சர்மா சிரமப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காயத்தில் இருந்து மீண்டாலும் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் பார்ம் இல்லாமல் போராடி வருவதால், பார்முக்கு திரும்ப வேண்டும்.
அபிமன்யு ஈஸ்வரன்:
அடுத்த தொடருக்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் கே.எல்.ராகுலுக்குப் பதிலாக தொடக்க ஆட்டக்காரராக வரக்கூடிய வீரர்களில் அபிமன்யு ஈஸ்வரனும் ஒருவர். மேற்கு வங்க வீரரான இவர் நீண்ட காலமாக உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் இந்தியா ஏ அணிக்காக விளையாடி தொடர்ந்து இரண்டு சதங்கள் அடித்து அசத்தினார்.
27 வயதான அபிமன்யூ ஈஸ்வரன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அடுத்த அடியை நோக்கி நகர்வதற்கு இதுவே சரியான நேரம் ஆகும். ரோகித் ஷர்மா போன்ற வீரர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஈஸ்வரனுக்கு பி.சி.சி.ஐ. வாய்ப்பு வழங்குமா..? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.