இந்தியா- வங்காளதேசத்திற்கு இடையிலான 2வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றபிறகு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியா அணி எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதை இங்கு காணலாம்.
டாக்காவில் உள்ள ஷேரே பங்களா தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்டில் ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச தேசிய கிரிக்கெட் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய தேசிய கிரிக்கெட் அணி.
டெஸ்ட் போட்டியின் வெற்றியின் மூலம், இந்தியா மதிப்புமிக்க ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
இந்தியா தனது முதல் இன்னிங்சில் வங்கதேசத்தை 227 ரன்களுக்கு சுருட்டியது. பேட்டிங்கைத் தேர்வு செய்த பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 157 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். உமேஷ் யாதவ் (4/25) மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் (4/71) இடையே 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அதே சமயம் மீண்டும் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் (2/2/ 50) மீதமுள்ள இரண்டையும் கைப்பற்றியது, இந்தியா 73.5 ஓவர்களில் வங்கதேசத்தை அவுட்டாக்கியது.
டாக்காவில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் 80 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், 3 நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடக்க வீரர் நஜ்முல் ஹொசைச் 5 ரன்களில் வெளியேற, 3 வதாக களமிறங்கிய மொமினுல் 5 ரன்களில் சிராஜ் பந்தில் பண்ட்டிடம் கேட்சானார். தொடர்ந்து கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்ஃபிகுர் ரஹ்மான் வெளியேறினார். மறுமுனையில், தொடக்க வீரர் ஜகிர் ஹாசன் நங்கூரம் போல் நின்று அரைசதம் கடந்து உமேஷ் பந்துவீச்சில் சிராஜிடம் கேட்சானார்.
145 ரன்கள் இலக்கு:
அடுத்து உள்ளே வந்த லிட்டன் தாஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துல் 73 ரன்களில் வெளியேற, மெகிடி டக் அவுட்டாகி நடையைக் கட்டினார். நுரூல் ஹாசன் 31 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் 1 ரன்னுடம், கலீல் அஹமது 4 ரன்களுடனும் அவுட்டானார்கள். தஸ்கின் அஹமது மட்டும் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.
இந்தியா வெற்றி:
இந்தியா- வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் 3ம் நாள் முடிவில் இந்திய அணி 45-4 என்ற மோசமான சூழ்நிலையில் இருந்தது. தொடர்ந்து 4வது நாள் தொடங்கிய இந்திய அணி, ஜெய்தேவ் உனத்கட்டை இழந்தது.
அதன் தொடர்ச்சியாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 13 பந்துகளில் 9 ரன்களை எடுத்து மெகிடி ஹாசன் பந்து வீச்சில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 74 ரன்களில் 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அதன்பிறகு, ஷ்ரேயஸ் ஐயர்- அஸ்வின் ஜோடி வங்கதேசத்தின் பந்துவீச்சில் அஸ்திவாரத்தை ஆட்ட தொடங்கினர். இருவரும் தேவையான நேரத்தில் பந்துகளை பவுண்டரிகளுக்கு ஓடவிட்டு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
தொடர்ந்து, இருவரும் சிறப்பாக ஆட இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ரவிசந்திரன் அஷ்வின் 42 ரன்களுடனும், ஷ்ரேயஸ் ஐயர் 29 ரன்களுடனும் அவுட்டாகாமல் கடைசி வரை களத்தில் இருந்தனர்.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக மெகிடி ஹாசன் 5 விக்கெட்களும், கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 2 விக்கெட்களும் எடுத்திருந்தனர்.
இடம் | அணி | போட்டிகள் | வெற்றி | தோல்வி | தோல்வி | புள்ளிகள் |
1 | ஆஸ்திரேலியா | 13 | 9 | 1 | 3 | 120 |
2 | இந்தியா | 14 | 8 | 4 | 2 | 87 |
3 | தென்னாப்பிரிக்கா | 11 | 6 | 5 | 0 | 72 |
4 | இலங்கை | 10 | 5 | 4 | 1 | 64 |
5 | இங்கிலாந்து | 22 | 10 | 8 | 4 | 124 |
6 | வெஸ்ட் இண்டீஸ் | 11 | 4 | 5 | 2 | 54 |
7 | பாகிஸ்தான் | 12 | 4 | 6 | 2 | 56 |
8 | நியூசிலாந்து | 9 | 2 | 6 | 1 | 28 |
9 | வங்கதேசம் | 12 | 1 | 10 | 1 | 16 |
இந்திய அணி தகுதி பெறுமா?
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு இந்திய அணி, இந்த மாதம் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டது. இதில், இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 3ல் வெற்றிபெற வேண்டும். 3 ல் வெற்றிபெற்றால் இந்திய அணி நிச்சயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெறும். இந்தியா தனது அடுத்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அவர்களின் வெற்றி சதவீதம் 68.06 ஆக உயரும், மேலும் அவர்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்கான நல்ல வாய்ப்பாக இருக்கும்.