எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பிய கருண் நாயர் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 

கருண்நாயர்:

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது, இதில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு களம் கண்ட இந்திய வீரர் கருண் நாயர் 4 பந்துகளை சந்தித்து பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

3011 நாட்களுக்கு பின்னர் பேட்டிங்:

கடைசியாக 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு 8 ஆண்டுகள் கழித்து அதாவது 3011 நாட்களுக்கு பிறகு இன்று ஆடிய நிலையில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ‘

எட்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த கருண் நாயர், ஆண்கள் டெஸ்ட் அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இடையில் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளை (402) தவறவிட்ட நிலையில் டக் அவுட்டானர்

ஒல்லி போப்பின் அற்புதமான கேட்ச்

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒரு முழு அவுட்ஸ்விங்கரை வீசினார் அதை கருண் நாயர்  கவர் டிரைவ் விளையாட விரும்பினார், ஆனால் ஷாட்டை டைம் செய்ய முடியததால். ஒல்லி போப் தனது இடதுபுறமாக முழு நீள டைவ் அடித்து அற்புதமான கேட்சை எடுத்தார்.

பயிற்சி ஆட்டத்தில் இரட்டை சதம்:

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் அவர் இரட்டை சதம் அடித்தார். இது தவிர, உள்நாட்டு கிரிக்கெட், ரஞ்சி டிராபி மற்றும் கடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . 

இதன் காரணமாக கருண் நாயர் தேசிய அணிக்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வந்தது. கடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியின் போது கருணுடன் விளையாட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

சாய் சுதர்சன் டக் அவுட்:

அதே போல இந்தப் போட்டியில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சாய் சுதர்ஷனும் நான்கு பந்துகளில் தனது கணக்கைத் திறக்காமலேயே அவுட் ஆனார். இப்போது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் கருண் நாயருக்கும் அதே கதிதான் ஏற்பட்டது. இரு பேட்ஸ்மேன்களையும் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.