Kane Williamson: இறுதிப்போட்டியில் காயத்தில் சிக்கிய வில்லியம்சன்! விரைவில் ஓய்வா?
இறுதிப்போட்டியில் பேட்டிங் செய்தபோது ஏற்பட்ட காயம் காரணமாக வில்லியம்சன் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. அவரது உடல்தகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

champions trophy 2025 IND vs NZ: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 252 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது.
காயத்தால் அவதியுறும் வில்லியம்சன்:
252 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியினர் இந்தியாவின் வெற்றியைத் தடுக்க முழுமூச்சில் போராடினர். அப்போது, இரண்டாவது இன்னிங்சில் வில்லியம்சன் ஃபீல்டிங் செய்யவில்லை. பேட்டிங் செய்தபோது அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் ஃபீல்டிங் செய்யவில்லை. அவருக்கு பதிலாக சாப்மன் ஃபீல்டிங் செய்தார்.
நியூசிலாந்து அணிக்காக அவர் இந்த சீசன் முழுவதும் மிகச்சிறப்பாக ஆடினார். அவர் இந்த சீசனில் 5 ஆட்டங்களில் ஆடி 200 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாெடருக்கு பிறகு வில்லியம்சன் விரைவில் ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
34 வயதான வில்லியம்சன் இதுவரை 172 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8839 ரன்கள் எடுத்துள்ளார். அதில் அவர் 15 சதங்களும், 47 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் 105 போட்டிகளில் 186 இன்னிங்ஸ்களில் ஆடி 33 சதங்கள், 6 இரட்டை சதங்கள், 37 அரைசதங்களுடன் 9 ஆயிரத்து 276 ரன்கள் எடுத்துள்ளார். 93 டி20 போட்டிகளில் 18 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 575 ரன்கள் எடுத்துள்ளார்.
நியூசிலாந்து மட்டுமின்றி பல நாடுகளில் வில்லியம்சனுக்கு ரசிகர்கள் உள்ளனர். பேட்ஸ்மேனாக மட்டுமின்றி ஃபீல்டராகவும் வில்லியம்சன் அசத்தியுள்ளார். இன்றைய போட்டியில் அவர் ஃபீல்டிங் செய்யாதது அணிக்கு பின்னடைவாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.