IND vs NZ Final: கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?

IND vs NZ Final:சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி மகுடம் சூடுவதற்கு நியூசிலாந்து அணி 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Continues below advertisement

champions trophy ind vs nz final: ஒரு மாத காலமாக நடந்து வந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மகுடம் சூடப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

Continues below advertisement

தொடக்கத்தில் தடுமாறிய நியூசிலாந்து:

இதையடுத்து, வில் யங் - ரவீந்திரா ஜோடி ஆட்டத்தைத் தொடர்ந்தது. ரவீந்திரா பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி அதிரடியாக ஆட வில் யங் சற்று தடுமாறினார். ரவீந்திரா அதிரடியால் ரன்ரேட் எகிறத் தொடங்கவும் கேப்டன் ரோகித்சர்மா சுழல் பந்துவீச்சு தாக்குதலைத் தொடங்கினர். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது. 

வருண் சக்கரவர்த்தி வீசிய ஆட்டத்தின் 8வது ஓவரில் வில் யங் 15 ரன்னில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் இந்தியாவை அச்சுறுத்திய ரவீந்திராவை குல்தீப் யாதவ் தான் வீசிய முதல் பந்திலே போல்டாக்கினார். ரவீந்திரா 29 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 37 ரன்னில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அனுபவ வீரர் வில்லியம்சனையும் குல்தீப் யாதவ் அவுட்டாக்கினார். வில்லியம்சன் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணிக்காக மிட்செல் - டாம் லாதம் ஜோடி சேர்ந்தது. 

மிட்செல் பொறுப்பான ஆட்டம்:

இந்த ஜோடி மிகவும் நிதானமாக ஆட டாம் லாதம் 30 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்தில் அவுட்டானார். இதையடுத்து, மிட்செல் - ப்லிப்ஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து மிகவும் நிதானமாக ஆடினர். இதனால், நியூசிலாந்து ரன் சற்று உயரத்தொடங்கியது. ப்லிப்ஸ் அதிரடி காட்டாமல் ஓரிரு ரன்களாக எடுத்தார். ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பினார். மறுமுனையில் மிட்செல் மிகவும் நிதானமாக ஆடினார்.

இந்திய அணிக்கு குடைச்சல் தந்த இந்த ஜோடியை வருண் சக்கரவர்த்தி பிரித்தார். அவரது சுழலில் கிளென் ப்லிப்ஸ் போல்டானார். அவர் 52 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மிகவும் நிதானமாக ஆடிய மிட்செல் அரைசதம் கடந்தார். அரைசதம் கடந்த பிறகு அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிட்செல், முகமது ஷமி பந்தில் அவுட்டானார். அவர் 101 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 63 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 

கடைசியில் கலக்கிய ப்ராஸ்வெல்:

கடைசியில் நியூசிலாந்து அணிக்காக  ப்ராஸ்வெல் அதிரடி காட்டினார். அவர் பவுண்டரிகளும், சிக்ஸரும் விளாச 45வது ஓவரில் 200 ரன்களை எட்டிய நியூசிலாந்த அணி, கடைசி 5 ஓவர்களில் நல்ல ரன்களை எட்டியது. ப்ராஸ்வெல் கடைசியில் அபாரமாக ஆடி 40 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 53 ரன்களை எடுத்தார். இதனால், நியூசிலாந்து அணி 251 ரன்களை எடுத்தது. இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அசத்திய சுழல், எடுபடாத வேகம்:

இந்திய அணிக்காக வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சுழலில் இந்தியா சிறப்பாக பந்துவீசியிருந்தாலும் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை. முக்கிய வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமியின் பந்தில் 9 ஓவர்களில் 74 ரன்களை நியூசிலாந்து எடுத்தனர். அவர் 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார். பாண்ட்யா 3 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

Continues below advertisement