டி20 உலகக் கோப்பை இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நேற்று தொடங்கியது. இந்தத் தொடருக்கான இந்திய அணியிலிருந்து முகமது ஷமி மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷபாஸ் அகமது ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் அர்ஷ்தீப் சிங்கும் அணியில் இடம்பிடித்துள்ளார். நேற்றைய போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா களமிறங்கவில்லை.


இந்நிலையில் அவருக்கு முதுகு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக மருத்துவர்களுக்கு அவருக்கு 5-6 வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிகிறது.  இதனால் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து இவர் விலகும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.


 






இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டுள்ளார். ஆகவே அவர் தன்னுடைய உடல்தகுதியை நிரூபிக்கும் சூழலில் இந்திய அணியில் ஷமி சேர்க்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே தீபக் ஹூடாவின் காயம் தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அந்தக் காயம் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு மாற்று வீரர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டராக இருக்கும் தீபக் சாஹர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 


டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:


ரோகித் சர்மா(கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா,ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஜஸ்பிரீத் பும்ரா, தீபக் ஹூடா, அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங் 


இவர்கள் தவிர ரிசர்வ் வீரர்களாக முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் உள்ளனர். 


சூப்பர் 12 சுற்றில் முதல் குரூப்பில் ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் முதல் சுற்றிலிருந்து தகுதி பெறும் இரண்டு அணிகள் இடம்பெறுள்ளன. அதேபோல் இரண்டாவது குரூப்பில் இந்தியா,பாகிஸ்தான், பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா மற்றும் முதல் சுற்றிலிருந்து தகுதி பெறும் இரண்டு அணிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.


 


சூப்பர் 12ல் இந்தியாவின் அட்டவணை:


23 அக்டோபர்: இந்தியா vs பாகிஸ்தான்  (மெல்பேர்ன்)


27 அக்டோபர்: இந்தியா vs ஏ2(சிட்னி)


30 அக்டோபர்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா(பெர்த்)


2 நவம்பர்: இந்தியா vs பங்களாதேஷ்(பெர்த்)


6 நவம்பர்: இந்தியா vs பி 1 (மெல்பேர்ன்)


சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதன்பின்னர் தகுதி சுற்றில் ஏ பிரிவில் 2 ஆவது இடம் பிடிக்கும் அணி, தென்னாப்பிரிக்கா,பங்களாதேஷ் மற்றும் தகுதிச் சுற்றில் பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகளுடன் விளையாட உள்ளது. 


சூப்பர் 12 சுற்றில் இரண்டு குரூப்களில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி போட்டிகள் வரும் நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இறுதி போட்டி நவம்பர் 13ஆம் தேதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. அதேபோல் இம்முறையும் டி20 உலகக் கோப்பையில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. கடந்த முறை அடந்த தோல்விக்கு இம்முறை இந்தியா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.