ரசிகர்கள் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துலீப் டிராபி தொடர் நாளை (செப்டம்பர் 5) தொடங்க உள்ளது. அதன்படி இந்த தொடர் செப்டம்பர் 22 ஆம் தேதி முடிகிறது.
நான்கு அணிகள்:
துலீப் டிராபியில் மொத்தம் நான்கு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய அணியின் இளம் வீரர்களான சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோர் கேப்டன்களாக செயல்பட உள்ளனர். அந்தவகையில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக இருக்கும் அணி டி யில் விக்கெட் கீப்பர் பேட்டராக இடம் பெற்றார் இஷான் கிஷன்.
முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது தனிப்பட்ட காரணங்களால் நாடு திரும்பினார் இஷான் கிஷன். அதனைத்தொடர்ந்து இந்திய அணியில் இவர் தேர்வு செய்யப்படவில்லை. அதே நேரம் உள் நாட்டில் நடைபெறும் போட்டிகளில் விளையாட வேண்டும் அப்போது தான் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று பிசிசிஐ தெரிவித்தது. ஆனால் இஷான் கிஷான் இதை எல்லாம் காதில் வாங்கியாதக தெரியவில்லை.
பிசிசிஐ சொல் பேச்சு கேட்காததால் இஷான் கிஷான் மீது ஒழுங்கு நடவடைக்கை எடுப்பட்டது. அதே போல் பிசிசிஐ இவரது ஒப்பந்தத்தையும் ரத்து செய்து உத்தரவு போட்டது. இதனை கருத்தில் கொண்டு துலீப் டிராபியில் விளையாட ஒப்புக்கொண்டார். இதற்கு முன் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட புச்சி பாபு தொடரில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் களமிறங்கினார்.
இஷான் கிஷான் விலகல்:
முதல் போட்டியில் அதிரடியாக சதம் விளாசினாலும், 2வது போட்டியில் சொதப்பலாக ஆடி ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். இதன் காரணமாக ஜார்க்கண்ட் அணி முதல் சுற்றுப் போட்டிகளுடன் வெளியேறியது. இந்நிலையில் இஷான் கிஷன் துலீப் டிராபியில் கவனம் செலுத்தினார்.
இச்சூழலில் தான் இஷான் கிஷான் நாளை நடைபெறும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணி டி க்கு எதிராக விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. காயம் காரணமாக அவர் விளையாட வாய்ப்பு இல்லை என்று கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் சூர்யகுமார் யாதவ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக துலீப் டிராபியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Rahul Dravid:பயிற்சியாளரா இல்லைன்னா என்ன.. ஆலோசனை வேணுமா இத பண்ணுங்க! டிராவிட் சொன்ன தகவல்
மேலும் படிக்க: Bajrang Punia:பாஜகவிற்கு எதிராக ஸ்கெட்ச்.. காங்கிரஸில் கைகோர்க்கும் பஜ்ரங் புனியா?