ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் இலங்கை, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்ற நிலையில், தற்போது நான்கு அணிகள் தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளன. 


தகுதி சுற்றின் அடிப்படையில் அயர்லாந்து, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா அணிகள் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையின் லீக் போட்டிகளை எட்டுவதற்கு தர்போது 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 


சூப்பர் 6 சுற்றுக்கு நுழைந்த அணிகள் எது..? 


நான்கு அணிகள் தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறிய நிலையில், இந்த 6 அணிகளும் சூப்பர் 6க்கு முன்னேறியுள்ளன. அதன்படி, இலங்கை, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன் மற்றும் மேற்கந்திய தீவுகள் அடுத்த படிக்கு தங்களது காலடியை எடுத்து வைத்துள்ளன. 


சூப்பர் 6 போட்டிகள் எப்போது தொடக்கம்..? 


தகுதி சுற்று சூப்பர் 6 போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 29 ம் தேதி முதல் தொடங்குகிறது. இதன் இறுதிப்போட்டி ஜூலை 9ம் தேதி நடைபெற இருக்கிறது. இறுதிப்போட்டிக்கு செல்லும் அணிகள் உலக கோப்பை 2023 லீக் போட்டிக்கு தகுதிப்பெறும். 


நேரடியாக தகுதிப்பெற்ற 8 அணிகள்: 


போட்டியை நடத்தும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இப்போது மீதமுள்ள இரண்டு அணிகள் தகுதிச் சுற்றில் இருந்து வரும். 


அதிகாரப்பூர்வ 2023 உலகக் கோப்பை போட்டியில் வருகின்ற அக்டோபர்-நவம்பரில் தொடங்கப்பட இருக்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவதால், இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல தீவிரமாக முயற்சிக்கும். 


எப்போது தொடங்கும் உலகக் கோப்பை..?


ஐசிசி உலகக் கோப்பை 2023 உத்தேச வரைவு அட்டவணை குறித்த ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியாவில் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறும் என்றும், முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது. 


மேலும், இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக களமிறங்குகிறது என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தநிலையில், ஐசிசி உலகக் கோப்பை 2023 அட்டவணை வருகின்ற ஜூன் 27 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு வெளியாகும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.