வருகின்ற டிசம்பர் 19ம் தேதி ஐபிஎல் 2024ம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்கபட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் சமர்பிக்க வேண்டும். இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்கள் அணியில் உள்ள வீரர்களை வெளியேற்றலாம் அல்லது மற்ற அணிகளிடம் இருந்து மாற்றிகொள்ளலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு ஆகியோரது பெயரை வெளியிடுகிறது. அம்பதி ராயுடு கடந்த ஆண்டு தனது ஓய்வை அறிவித்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து காயத்துடன் போராடி வருகிறார். மேலும் இந்த இரண்டு வீரர்களை தவிர கைலி ஜேம்சன், சிசண்டா மகலா, டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சிமர்ஜித் சிங் ஆகியோரு விடுவிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
டெல்லி கேபிடல்ஸ்:
டெல்லி கேப்பிடல்ஸ் சர்பராஸ் கான் மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோரை ஏற்கனவே விடுவித்தது. இது தவிர, ரிலே ருஸ்ஸோ, ரோவ்மேன் பவல், முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் கமலேஷ் நாகர்கோடி ஆகியோரை இன்று வெளியிடலாம் என்று தெரிகிறது.
குஜராத் டைட்டன்ஸ்:
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையலாம். இது தவிர கேஎல் பாரத், மேத்யூ வேட், தசுன் ஷனகா, ஓடியன் ஸ்மித், தர்ஷன் நல்கண்டே, பிரதீப் சங்வான் மற்றும் உர்வில் படேல் ஆகியோரையும் வெளியிடலாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், ஷாகிப் அல் ஹசன், டிம் சவுத்தி, டேவிட் விஜே, ஜெகதீஷன், லிட்டன் தாஸ் மற்றும் மந்திர் சிங் ஆகியோரை விட்டு வெளியேறலாம்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தீபக் ஹூடா, டேனியல் சாம்ஸ், ஜெய்தீப் உனத்கட், யுத்வீர் சிங் மற்றும் கரண் சர்மா ஆகியோரை விடுவிக்கலாம்.
மும்பை இந்தியன்ஸ்:
மும்பை இந்தியன்ஸ் அணியில் கேமரூன் கிரீன், கிறிஸ் ஜோர்டான், ரிலே மெரிடித், அர்ஷத் கான், சந்தீப் வாரியர், விஷ்ணு வினோத் மற்றும் ஹிருத்திக் ஷைகின் ஆகியோரை விடுவிக்கலாம்.
பஞ்சாப் கிங்ஸ்:
பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹர்ப்ரீத் பிரார், ராஜ், பஞ்வா, மேத்யூ ஷார்ட், ஷிவம் சிங், பல்தேஜ் சிங் மற்றும் மோகித் ரதி ஆகியோரை விடுவிக்கலாம்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜேசன் ஹோல்டர், நவ்தீப் சைனி, ஜோ ரூட், கே.எல்.ஆசிப் மற்றும் க்ருனால் சிங் ஆகியோரை விடுவிக்கலாம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், வில் ஜாக், கேதர் ஜாதவ், மஹிபால் லோம்ரோர், கரண் சர்மா, ராஜன் குமார் ஆகியோரை விடுவிக்கலாம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மயங்க் அகர்வால், அப்துல் சாத், கார்த்திக் தியாகி, அடில் ரஷித், மயங்க் டாகர், அவுகில் ஹவுசன், நிதிஷ் ரெட்டி, அன்மோல்பிரீத் சிங் மற்றும் சன்வீர் சிங் ஆகியோரை விடுவிக்கலாம்.