இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். கிரிக்கெட்டில் மட்டும் ஹீரோவாக இல்லாமல், தற்போது அவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவென நிரூபித்துள்ளார். நேற்று உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் இருந்து சிறிது தொலைவில் ஒரு கார் விபத்துள்ளாகியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி காருக்கு முன் நடந்துள்ளது. 


அப்போது, முகமது ஷமி விபத்தை பார்த்த அவர் தனது காரை நிறுத்தி காரில் இருந்தவர்களை காப்பாற்றியுள்ளார். இந்த முழு சம்பவத்தின் வீடியோவையும் முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பகிரப்பட்ட தகவலில்படி, நைனிடால் செல்லும்போது, சிறிது தூரத்திற்கு முன்பு அவருக்கு முன்னால் கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின்போது காரில் சிலர் இருந்துள்ளனர். இதையடுத்து, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது காரை நிறுத்தி, காரில் இருந்தவர்களை தனது நண்பர்களுடன் வெளியே இழுத்து காப்பாற்றியுள்ளார். தொடர்ந்து, அடிப்பட்டவர்களுக்கு முகமது ஷமியே முதலுதவி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ள கேப்ஷனில், “ ஒருவரை காப்பாற்றியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் தற்போது இரண்டாவது முறையாக பிறந்துள்ளார். வரது கார் நானிடால் அருகே உள்ள மலைப்பாதையில் இருந்து என் முன்னால் கீழே விழுந்தது. அவர்கள் எல்லாரையும் நாங்கள் காப்பாற்றிவிட்டோம். 31 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை பலர் லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றன. 






கட்டு போட்டு விட்ட முகமது ஷமி: 


காயமடைந்த நபரின் கையில் ஷமி கட்டு கட்டுவதை வீடியோவில் காணலாம். ஷமி வெள்ளை நிற ஆடைகள் மற்றும் ரெட் கலர் தொப்பி அணிந்திருந்தார். மேலும், அந்த இடத்தில் பலர் நின்றிருந்த நிலையில், வெள்ளை நிற காரொன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இருந்ததை காணலாம். 


உலகக் கோப்பையில் ஆபார ஆட்டம்: 


சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக முகமது ஷமி சிறப்பாக செயல்பட்டார். மொத்தமாக, 24 விக்கெட்களை வீழ்த்தில் எதிரணிக்கு பயம் காட்டினார். இந்தநிலையில், உலகக் கோப்பை முடிந்த பிறகு தனது நண்பர்களுடம் விடுமுறையை அனுபவிக்க சென்றுள்ளார். அப்போது, நைனிடால் செல்லும்போது, இந்த கார் விபத்தை பார்த்த ஷமி, இறங்கி அவர்களுக்கு உதவி செய்துள்ளார்.