Hardik Natasa: ஹர்திக் விவாகரத்து அறிவிப்பின்போது அநாவசியாமாக குற்றம்சாட்டியதாக, நெட்டிசன்கள் பலரும் நடாஷாவிடம் மன்னிப்பு கோரி வருகின்றனர்.
புதிய காதலியுடன் ஹர்திக்:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, மாடல் மஹிகா சர்மா உடன் உறவில் இருப்பது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவருடன் சேர்ந்து வெளியூர் சென்றபோது கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை ஹர்திக் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ள நிலையில், மற்றொரு தரப்பினர் நடாஷாவிடம் மன்னிப்பு கேட்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
யார் இந்த மஹிகா சர்மா?
ஹர்திக் இன்ஸ்டாகிரமில் புகைப்படங்களை வெளியிடுவதற்கு முன்பாக, மும்பை ஏர்போர்டில் மஹிகாவுடன் சேர்ந்து காணப்பட்டார். இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், அதனை ஹர்திக் தனது சமூக வலைதள பதிவால் உறுதி செய்துள்ளார். மஹிகா ஃபேஷன் உலகில் பிரபலமான நபராக உள்ளார். சிறந்த இந்திய வடிவமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். பல்வேறு விளம்பரங்கள் மற்றும் இசை வீடியோக்களில் நடித்துள்ளார். டெல்லியில் பள்ளிப் படிப்பையும், குஜராத்தில் கல்லூரி படிப்பையும், அமெரிக்காவில் உயர்கல்வியையும் அவர் முடித்துள்ளார். 24 வயதான மஹிகா, ஹர்திக் உடனான உறுதிப்படுத்தப்படாத உறவால் தற்போது கூடுதல் ஊடக வெளிச்சத்தை பெற்றுள்ளார்.
நடாஷாவிடம் மன்னிப்பு கோரும் நெட்டிசன்கள்:
இதனிடையே, கடந்த 2024ம் ஆண்டு ஹர்திக்கிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடாஷாவிடம் நெட்டிசன்கள் பலரும் விவாகரத்து கோரி வருகின்றனர். அதில், “அவசரப்பட்டு உங்கள் மீது தான் தவறு என அவதூறு பேசிவிட்டோம், நாடு முழுவதும் ரசிகர்கள் வெறுத்தி ஒதுக்கிய நிலையில், சிம்பதிக்காக உங்கள் மீது ஹர்திக் குற்றம்சாட்டியுள்ளார் என இப்போது தான் புரிகிறது, அநாவசியமாக உங்களை பற்றி தவறாக பேசியதற்கு மன்னித்துவிடுங்கள்” என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
விவாகரத்து ஏன்?
ஹர்திக்கின் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு ஈடுகொடுக்க முடியாமல், நடாஷாவுடன் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சரிசெய்ய பல முறை முயன்றும், அவர் தோல்வியுற்றாராம். அதன்பிறகே, இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் யாருக்கும் நிம்மதி கிடைக்காது என்பதாலேயே, பிரிந்து வாழலாம் என்ற முடிவை நடாஷா எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.