ஒருநாள் போட்டியில் 81 ரன்களை விட்டுக்கொடுத்து பெரிய விக்கெட்டுகளை எடுக்க தவறிய காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் விளையாட வந்துள்ள ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு பழைய ஃபார்ம் கைவிட்டு போனதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். 8.10 எகனாமியில் மிகவும் மோசமாக பந்து வீசிய அவருடைய சாதாரன எகனாமியை விட இது இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆடும் ஆர்ச்சர்


வெள்ளியன்று ப்ளூம்ஃபோன்டெய்னில் உள்ள மவுங்காங் ஓவல் மைதானத்தில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தேர்ந்தெடுத்த தென்னாப்பிரிக்கா, 298/7 என்ற ரன்னை குவித்தது. மைதானத்தின் நல்ல பேட்டிங் கண்டிஷனை முழுமையாகப் பயன்படுத்தத் தவறிய தென்னாபிரிக்க அணி ஜோஃப்ரா ஆர்ச்சரை மட்டும் வெளுத்து வாங்கியது.


ஆர்ச்சர் 687 நாட்களுக்குப் பிறகு தனது சர்வதேச கம்பேக்கை கொடுத்தார். அவர் கடைசியாக செப்டம்பர் 2020 இல் ஒருநாள் போட்டியில் ஆடினார். இரண்டு வருட கேப்பிற்கு பிறகு மீண்டும் வந்த 27 வயதான அவருக்கு இரண்டு முழங்கை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதுகு அழுத்த எலும்பு முறிவில் இருந்து மீண்டு வந்துள்ளார். இந்த போட்டியில் விளையாடும் முன் ஐந்து SA20 ஆட்டங்களில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 



மோசமான பந்துவீச்சு


இந்த போட்டியில் ஆர்ச்சர் அவரது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளார். ஜோஃப்ரா ஆர்ச்சர் 10-0-81-1 என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். அவருடைய ஒரே ஒரு விக்கெட்டும் கீழ்-வரிசை பேட்ஸ்மேன் வெய்ன் பார்னெல் உடைய விக்கெட் ஆகும். அவர் வீசிய ஐந்தாவது பந்திலேயே குயின்டன் டி காக் பவுண்டரி அடிக்க, இது ஒரு ஃபிளாட் ஆன ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு இது கடினமான நாள் என்று ஆர்ச்சருக்கு புரிந்தது. சக தொடக்க வீரர் டெம்பா பவுமா அதிரடியில் இறங்க சிறிது நேரம் எடுத்துக் கொண்டார், ஆர்ச்சரின் ஐந்து ஓவர் பவர்பிளே ஸ்பெல்லின் முடிவிலேயே ஆர்ச்சர் 41 ரன்களை கொடுத்து விட்டார்.


தொடர்புடைய செய்திகள்: Crime: காதலுக்கு எதிர்ப்பு.. இளைஞருடன் சேர்ந்து ரயில்முன் பாய்ந்து உயிரைவிட்ட 10ம் வகுப்பு மாணவி..! பரங்கிமலையில் பரிதாபம்


பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தாத ஆர்ச்சர்


அவருடைய வேகம் பேட்ஸ்மேன்களை எள்ளளவும் இந்த போட்டியில் அச்சுறுத்தவில்லை என்பது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு முன்பு அவர் ஒருநாள் போட்டிகளில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அதுமட்டுமின்றி 24 என்ற சிறந்த சராசரியுடன் 4.74 என்ற எகனாமியும் வைத்திருந்தார். ஆர்ச்சர் போட்டியில் இறங்குவதற்கு முன் செய்யபட்ட உடல் தகுதியில் '80% உடல் தகுதியுடன்' இருந்தார் என்று கூறப்பட்டது. ஆனாலும் இது போன்ற மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது இங்கிலாந்து அணியை பெரிய அளவில் பாதித்தது. சமூக ஊடகங்களில் அவரை பலர் விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர்.



இங்கிலாந்து தோல்விக்கு காரணம் அவரா?


இந்த போட்டியில் மேலும் சோகம் என்னவென்றால் போட்டியை இங்கிலாந்து அணி தோற்றது என்பதுதான். தென்னாபிரிக்க அணி பல நாட்களுக்கு பிறகு ஃபார்முக்கு திரும்பி இங்கிலாந்தை வீழ்த்தி உள்ளது. ஜேசன் ராய் செஞ்சுரி அடித்திருந்தாலும், டேவிட் மாலன் ஒரு அதிரடி அரைசதம் விளாசி இருந்தாலும் இரண்டாவது இன்னிங்சின் இரண்டாம் பாதியை தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 144 ரன்கள் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பை உடைத்த அவர்கள் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்த்த 44.2 ஓவர்களில் 271 ரன்களுக்குள் சுருட்டி அதிர்ச்சி அளித்தது. இந்த ஃபிளாட்டான டராக்கிலும் நோர்க்யா மற்றும் ரபாடா இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை மிரட்டினர். இதில் ஆர்ச்சர் அவ்வளவு ரன்கள் விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் கொஞ்சம் இலக்கு குறைந்திருக்கும் என்றும், அந்த ரன்னை சேஸ் செய்வது இவ்வளவு கடினமாக இருந்திருக்காது என்றும் ரசிகர்கள் ஆர்ச்சர் பக்கம் லைட்டை திருப்பி உள்ளனர்.