INDvsNZ 3RD ODI LIVE மழையால் கைவிடப்பட்ட 3ஆவது ஒரு நாள் ஆட்டம்: தொடரை வென்றது நியூசிலாந்து
INDvsNZ 3RD ODI LIVE: மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நியூசிலாந்தின் ஹாஹ்லி ஓவலில் உள்ள கிர்ஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
மழை காரணமாக 3ஆவது ஒரு நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து தொடரை நியூசிலாந்து வென்றது.
மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. போட்டி மழையால் நடத்தப்படமால் போனால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்படும்.
கனியாமூர் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வன்முறை ஏற்பட்டதால் பள்ளி மூடப்பட்டது. ஒரு மாதத்திற்கு பிறகு நிலமை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
9 முதல் 12ஆம் வகுப்புகளில் உள்ள 504 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
18 ஓவர்கள் முடிந்த நிலையில் போட்டி மழையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 220 ரன்கள் இலக்கு என்ற நிலையில் நியூசிலாந்து அணி 104 - 1 என்ற வலுவான நிலையில் உள்ளது.
போட்டியின் 18வது ஓவரில் கான்வே அடித்த ஃபோர் மூலம் நியூசிலாந்து அணி 100 ரன்களைக் கடந்து இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.
அரைசதம் கடந்த ஆலன் உம்ரான் பந்து வீச்சில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழ்ந்தார்.
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆலன் 50 பந்தில் 7ஃபோர் 1 சிக்ஸர் விளாசி அரைசதம் அடித்துள்ளார். கான்வேவும் அரைசதம் நோக்கி முன்னேறி வருகிறார்.
15 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் நியூசிலாந்து அணி நிதானமாக இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. இந்திய பவுலர்கள் தொடக்க ஜோடியை பிரிக்க திணறி வருகிறார்கள்.
தொடக்கம் முதல் மிகவும் நிதானமாக விளையாடிவரும் நியூசிலாந்து அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்துள்ளது.
ஆலன் அடித்த பந்து ஷாட் ஃபைன் லெக் சைடில் தூக்கு அடிக்கப்பட்ட பந்தை ஓடிவந்து பிடிக்க முயன்ற வாஷிங்டன் சுந்தர் நழுவவிட்டுள்ளார். இதுவரை மூன்று கேட்சுகள் மிஸ் செய்யப்பட்டுள்ளது.
அர்ஷ்தீப் சிங் வீசிய 6வது ஓவரை எதிர்கொண்ட கான்வே அடித்தபந்தை அர்ஷ்தீப் சிங் பிடிக்க முயற்சி செய்யும்போது, அது கை நழுவிப்போனது.
நியூசிலாந்து அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்து, மிகவும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்திவருகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஓவரை வீசிய இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங்கின் மிரட்டலான பந்துவீச்சினை எதிர்கொள்ள முடியாமல், நியூசிலாந்து அணியின் கான்வே திணறி வருகிறார்.
220 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடிக்க நியூசிலாந்து அணி களம் இறங்கியுள்ளது. நியூசிலாந்து அணி சார்பில் வழக்கம்போல் ஆலன் மற்றும் கான்வே களமிறங்கியுள்ளனர்.
பொறுப்புடன் விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தர் சிக்ஸர் அடித்து தனது அரைசதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.
9வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் போட்டியின் 46வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்துள்ளார். இந்திய அணி சார்பில் இதுவரை 4 சிக்ஸர்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
45வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களைக் கடந்ததுடன், தனது 8வது விக்கெட்டையும் இழந்து, நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போட்டியின் 41வது ஓவரை மேட் ஹென்றி வீசினார். இந்த ஓவரை எதிர்கொண்ட சஹால் ஆட்டமிழந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறப்பான தடுப்பாட்டத்தால், தனது விக்கெட்டை காப்பாற்றிக்கொண்டது மட்டும் இல்லாமல், வாஷிங்டன் சுந்தருக்கு நன்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். இந்த ஓவரில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை.
தொடக்கம் முதல் திணறிவரும் இந்திய அணி 170 ரன்களுக்குள் 7வது விக்கெட்டையும் இழந்துள்ளது.
போட்டியின் 34வது ஓவரில் இந்திய அணியின் தீபக் ஹூடா டிம் சவுதி பந்து வீச்சில் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறியுள்ளார்.
30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்து திணறிவருகிறது.
அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறியுள்ளார். இந்திய அணி தற்போது 121 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.
அணியின் நிலையை மனதில் வைத்து நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் மந்தமான ஷாட் அடித்து ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து 6 ரன்னில் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.
22. 4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து பவுலர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய அணி தடுமாறி வருகிறது.
களமிறங்கியது முதல் தடுமாறி வந்த ரிஷப் பண்ட் 16 பந்தில் 10 ரன்கள் எடுத்த நிலையில், மிட்ஷெல் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். அடுத்த விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் களமிறங்கியுள்ளார்..
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்க்கு 84 ரன்கள் சேர்த்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்து மிகவும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்திவருகிறது. களத்தில் ஸ்ரேயஸ் ஐயர் 14 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 4 ரன்களுடனும் உள்ளனர்.
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அணியின் கேப்டன் ஷிகர் தவான் போட்டியின் 13 ஓவரின் கடைசி பந்து, இன் - சைடு எட்ஜ் ஆனதால் போல்ட் ஆகி வெளியேறியுள்ளார். ரிஷப் பண்ட் களமிறங்கியுள்ளார்.
12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடி வருகிறது.
போட்டியின் 11 ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர் தூக்கி அடித்த பந்தை நியூசிலாந்து வீரர் மிலைன் தவறவிட்டு, ஸ்ரேயஸ் ஐயருக்கு மறு வாய்ப்பை வழங்கியுள்ளார்..
10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிறகு 43 ரன்கள் எடுத்துள்ளது..!
ஆரம்பம் முதல் தடுமாறி வந்த சுப்மன் கில் 22 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.
5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடி வருகிறது. சுப்மன் கில் இதுவரை ரன் கணக்கை தொடங்காமல் இருக்கிறார்.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச முடிவு செய்துள்ளார்.
Background
INDvsNZ 3RD ODI LIVE: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியது.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்குன் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 220 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. பயணத்தின் இறுதிப் போட்டி இன்று ஹாக்லி ஓவலில் உள்ள கிரிஸ்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகித்து வருகிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே திணறி வந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய சுப்மன் கில் தனது முதல் ரன்னை அடிக்கவே 10 பந்துகளுக்கு மேல் வீணடித்துவிட்டார். முதல் விக்கெட் அணியின் ஸ்கோர் 39 ரன்களாக இருந்தபோது வீழ்ந்தது. அதன் பின்னர், 55 ரன்கள் இருக்கும் போது 2வது விக்கெட் வீழ்ந்தது. இந்திய அணி சார்பில் யாராவது நிலைத்து நின்று விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் வாஷிங்டன் சுந்தரைத் தவிர யாரும் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை.
ஸ்ரேயஸ் ஐயர் 59 பந்தில் 8 ஃபோர் உட்பட 49 ரன்னில் தனது அரைசதத்தினை நழுவவிட்டு ஆட்டமிழந்தார். அதேபோல் வாஷிங்டன் சுந்தர் 64 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இதில் அவர் 5ஃபோர், ஒரு சிக்ஸர் விளாசியிருந்தார். 47.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. நியூசிலாந்து அணிக்கு 220 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மிகவும் கட்டுக்கோப்பாக பந்து வீசிய நியூசிலாந்து அணியின் சார்பில், ஆடம் மிலைன், மிட்ஷெல் தலா 3 விக்கெட்டுகளும், டிம் சவுதி 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.
இந்திய அணி; ஷிகர் தவான்(கேப்டன்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
நியூசிலாந்து : ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(கேப்டன் ), டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, மாட் ஹென்றி, டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -