India Squad: இலங்கை சுற்றுப்பயணத்தில் டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாஅர்.


இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம்:


கில் தலைமையிலான இளம் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது. இந்நிலையில் வரும் 27ம் தேதி முதல் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள்கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது அணி விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட டி20 அணியும், ரோகித் சர்மா தலைமையிலான  15 பேர் கொண்ட அணியும்  இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.


டி20 போட்டிக்கான இந்திய அணி:


சூர்யகுமார் யாதவ் (C), சுப்மன் கில்l (VC), யஷஹ்வி ஜெய்ஷ்வால், ரிங்கு சிங், ரியான் பிராக், ரிஷப் பண்ட் (WK), சஞ்சு சாம்ச்ன (WK), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது.


ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:


ரோஹித் ஷர்மா (C), சுப்மான் கில் (VC), விராட் கோலி, கேஎல் ராகுல் (WK), ரிஷப் பந்த் (WK), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.


யார் உள்ளே? யார் வெளியே?



  • ரோகித் மற்றும் கோலி இலங்கை தொடரில் களமிறங்குவார்களா? என கேள்வி எழுந்த நிலையில், இரண்டு பேருமே இந்த தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

  • அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்த, பும்ரா மற்றும் ஜடேஜாவிற்கு இலங்கை தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

  • தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு போட்டிகளுக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளார்.

  • நட்சத்திர வீரராக இருந்த ராகுல் ஒருநாள் போட்டிக்கான அணியில் மட்டும் இடம்பெற்றுள்ளார்

  • பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டு இருந்த ஸ்ரேயாஸ் அய்யர், மீண்டும் இந்திய அணியில் ஒருநாள் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


சூர்யகுமாருக்கு கேப்டன் பதவி:


டி20 உலகக் கோப்பையுடன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார். இதனால் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஹர்திக் பாண்ட்யாவிற்கும், சூர்யகுமார் யாதவிற்கும் இடையே கடும் போட்டி நிலவியதாக கூறப்பட்டது. இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.


கம்பீர் தலைமயில் முதல் தொடர்:


ராகுல் டிராவிட்டின் ஓய்வை தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக, முன்னாள் வீரர் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி விளையாட உள்ள முதல் தொடர் இதுவாகும். இதனால், இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், கம்பீரின் பரிந்துரைய்ன் பேரிலேயே, ஸ்ரேயாஸ் அய்யர் மீண்டும் ஒருநாள் அணிக்கு தேர்வானதாக கூறப்படுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக இருந்த கொல்கத்தா அணிக்கு, கம்பீர் ஆலோசகராக இருந்தது குறிப்பிடத்தக்கது.