இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு நிகரான புகழை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளும் தங்கள் வசம் வைத்துள்ளனர். அந்த வரிசையில் இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனையாக ஜொலிப்பவர் ஸ்மிருதி மந்தனா.

Continues below advertisement

ஸ்மிருதி மந்தனாவிற்கு திருமணம்:

ஸ்மிருதி மந்தனாவை இந்திய மகளிர் கிரிக்கெட்டின் விராட் கோலியாகவே ரசிகர்கள் கருதுகின்றனர். 18ம் எண் ஜெர்ஸி, ரன்கள் துரிதமாக சேர்க்கும் விதம், ஆர்சிபி என அவரை ஒரு பெண் கோலியாகவே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

மாப்பிள்ளை யார்?

மிகச்சிறந்த கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவிற்கு திருமணம் எப்போது? மாப்பிள்ளை யார்? என்ற கேள்வி நீண்டகாலமாக இருந்து வந்தது. இந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா திருமண அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரைப்பட பாடகர் மற்றும் இயக்குனர் பலாஷ் முச்சல்தான் ஸ்மிருதி மந்தனாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

Continues below advertisement

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை முச்சல் வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, ஸ்மிருதி மந்தனா இந்தூரின் மருமகள். அது மட்டுமே இப்போது கூற இயலும் என்று கூறினார். புன்னகையுடன் அவர் கூறிய தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 1995ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி பிறந்தவர் பலாஷ் முச்சல். இவரும் இவரது அக்காவும் சேர்ந்து இந்தியா முழுவதும் பல இடங்களில் கச்சேரி நடத்தியுள்ளனர். அந்த வருவாயைக் கொண்டு கடந்த 2013ம் ஆண்டு 2 .5 கோடி ரூபாயை நன்கொடையாக ஈட்டினார்.  இதய நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த தொகை கொண்டு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

விரைவில் திருமணம்:

பலாஷ் முச்சல் பி.காம் பட்டதாரி ஆவார். கடந்த 2019ம் ஆண்டு முதல் ஸ்மிருதி மந்தனாவுடன் இவர் பழகி வருகிறார். இவர்கள் காதல் விவகாரம் கிசுகிசுப்பாக அவ்வப்போது பேசப்பட்டு வந்த நிலையில், இவர்கள் திருமண தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பலாஷ் முச்சலின் அறிவிப்பைத் தொடர்ந்து இவர்கள் திருமண நிச்சயதார்த்தம், திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.

கடந்த 2014ம் ஆண்டு வெளியான திஷ்யான் படத்தில் இவர் முதன்முறையாக பணியாற்றினார். அமிதாப்பச்சன் நடித்த பூத்நாத் ரிட்டர்ன்ஸ் படத்திற்கும் இசையமைத்துள்ளார். பாலிவுட்டில் 18 வயதிலே இசையமைத்த இசையமைப்பாள்ர் என்ற பெருமையை பெற்றவர் பலாஷ் முச்சல். உலக சாதனைகளுக்கான கோல்டன் புத்தகத்திலும் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

நட்சத்திர வீராங்கனை:

29 வயதான ஸ்மிருதி மந்தனா 113 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 77 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 34 அரைசதங்கள், 13 சதங்கள் அடங்கும். 153 டி20 போட்டிகளில் ஆடி 31 அரைசதங்கள் மற்றும் 1 சதம் விளாசியுள்ளார். டி20 போட்டிகளில் 3 ஆயிரத்து 212 ரன்கள் எடுத்துள்ளார். ஆர்சிபி அணிக்காக கடந்த 2024ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையைப் பெற்றுத் தந்தார். ஆர்சிபி ஆடவர் அணி கோப்பையை வெல்லும் முன்பே கோப்பையை வென்ற பெருமையைப் பெற்றவர் ஸ்மிருதி மந்தனா. ஸ்மிருதி மந்தனா மும்பையைச் சேர்ந்தவர்.