உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான்மஸ்க். இவர் சமீபத்தில் மிகப்பெரிய சமூக வலைதளமான டுவிட்டரை வாங்கினார். இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன்கில். கடந்த சில சீசன்களாக ஐ.பி.எல். போட்டியில் ஆடி வந்த சுப்மன்கில் தற்போது புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விகியை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.




அதாவது, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எலான் மஸ்க் தயவு செய்து ஸ்விகியை வாங்குங்கள். அப்போதுதான் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு டெலிவரி செய்வார்கள் என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவிற்கு கீழ் பலரும் கலவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் சுப்மன்கில் கருத்துக்கு ஆதரவாகவும், சிலர் சுப்மன் கில்லிற்கு கண்டனங்களையும் தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சுப்மன்கில்க்கு பதில் அளித்துள்ள ஸ்விக்கி பெயரிலான போலி அக்கவுண்ட் ஒன்று, உங்கள் பேட்டிங் வேகத்தை விட நாங்கள் வேகம்தான் என குறிப்பிட்டு செமயாக கலாய்த்துள்ளது. ஃபேக் அக்கவுண்ட் என்றாலும் கொடூரமாக கலாய் விட்டதால் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






ஸ்விகி தனது டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் அடுத்து என்ன வாங்கப்போகிறார் என்பதை பார்க்கிறோம் என்று பதிவிட்டு, ஒரு பட்டியலை பதிவிட்டுள்ளனர்.




அதில், எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்தை வாங்குவது போலவும், அதற்கு மார்ஸ் மேன்சன், ஐ.எஸ்.எஸ்.ல் இருந்து இடது புறத்தில், பூமிக்கு எதிரே உள்ளது என்று பதிவிட்டுள்ளனர். மேலும், டுவிட்டர், 44 பில்லியன், மோதிசூர் லட்டு 5 துண்டுகள் ரூபாய் 3200 என்றும், காஜூ கட்லி 5 துண்டுகள் 4 ஆயிரத்து 400 ரூபாய் என்றும் பதிவிடப்பட்டுள்ளது.






இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண