ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ்சில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்து 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டியின் இரண்டாவது பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது. அதை இந்த தொகுப்பில் காண்போம்.
பெர்த டெஸ்ட்:
பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடந்த இந்தப்போட்டி டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் 150 ரன்களுக்கும், ஆஸ்திரேலிய முதலாவது இன்னிங்ஸ்சில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்ததாக இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல் ராகுல் மற்றும் யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாடினர். மேலும் இந்த டெஸ்டில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.
டெஸ்டில் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள்:
இந்த போட்டியில் லயனின் ஒவரில் சிக்சர் அடித்தன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓரே ஆண்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார் ஜெய்ஸ்வால்
- 34 - யஷஸ்வி ஜெய்ஸ்வால் (2024)
- 33- பிரெண்டன் மெக்கல்லம் (2014)
- 26 -பென் ஸ்டோக்ஸ் (2022)
- 22 -ஆடம் கில்கிறிஸ்ட் (2005)
- 22 -வீரேந்திர சேவாக் (2008)
ஆஸ்திரேலியாவில் இதுவரை நடந்த டெஸ்டில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் 50+ ரன்கள்:
- சுனில் கவாஸ்கர் (70) & சேத்தன் சவுகான் (85) மெல்போர்ன் 1981 ஆம் ஆண்டு
- சுனில் கவாஸ்கர் (166*) & கிரிஸ் ஸ்ரீகாந்த் (51) அடிலெய்டு 1985 ஆம் ஆண்டு
- சுனில் கவாஸ்கர் (172) & கிரிஸ் ஸ்ரீகாந்த் (116) சிட்னி 1986 ஆம் ஆண்டு
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் (90*) & கேஎல் ராகுல் (62*) பெர்த் 2024 ஆம் ஆண்டு
2000க்குப் பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த ஸ்கோர்கள்
- 85 vs தென் ஆப்பிரிக்கா- ஹோபார்ட் 2016
- 98 vs இங்கிலாந்து, மெல்போர்ன் 2010
- 104 vs இந்திய, பெர்த் 2024 *
- 127 vs பாகிஸ்தான், சிட்னி 2010
- 136 vs நியூசிலாந்து, ஹோபார்ட் 2011
2000 முதல் SENA நாடுகளில் 100+ தொடக்க பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய வீரர்கள்
- 3 - கேஎல் ராகுல் மற்றும் வீரேந்திர சேவாக்
- 2 - ஆகாஷ் சோப்ரா, வாசிம் ஜாஃபர் & தினேஷ் கார்த்திக்
ஆஸ்திரேலியாவில் 100 ரன் தொடக்க பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய தொடக்க வீரர்கள்:
- சுனில் கவாஸ்கர்/கே ஸ்ரீகாந்த் - 191 ரன்கள்- சிட்னி,1986 ஆம் ஆண்டு
- யஷஸ்வி ஜெய்ஸ்வால்/கேஎல் ராகுல் - பெர்த்,172* ரன்கள், 2024
- சுனில் கவாஸ்கர்/சேத்தன் சவுகான் - 165 ரன்கள், மெல்போர்ன்,1981 ஆம் ஆண்டு
- ஆகாஷ் சோப்ரா/வீரேந்திர சேவாக் - 141 ரன்கள், மெல்போர்ன்,2003 ஆம் ஆண்டு
- வினு மங்காட்/சாந்து சர்வதே - 124, ரன்கள், மெல்போர்ன்,1948
- ஆகாஷ் சோப்ரா/வீரேந்திர சேவாக் - 123, ரன்கள், சிட்னி,2004
குறைந்த ஸ்கோர் அடித்து முதல் இன்னிங்ஸில் இந்தியா முன்னிலை பெற்ற போட்டிகள்
- 99 vs நியூசிலாந்து, ஹாமில்டன் 2002 (5 ரன்கள் முன்னிலை)
- 147 vs இங்கிலாந்து, லார்ட்ஸ் 1936 (13 ரன்கள் முன்னிலை)
- 150 vs ஆஸ்திரேலியா, பெர்த் 2024 (46 ரன்கள் முன்னிலை) *
- 179 vs இங்கிலாந்து வான்கடே 1981 (13 ரன்கள் முன்னிலை)
2010 இல் மெல்போர்ன் டெஸ்டில் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் & அலஸ்டர் குக் தொடக்க விக்கெட்டுக்கு 159 ரன்கள் அடித்தனர் . அதற்கு முன்னர் 1986 இல் சிட்னி டெஸ்டில் சுனில் கவாஸ்கர் மற்றும் கிரிஸ் ஸ்ரீகாந்த் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 191 எடுத்த இன்றளவும் சாதனையாக உள்ளது. இப்படி ஓரே நாளில் பல சாதனைகளை உடைத்தும் சமன் செய்துள்ளனர் இந்திய வீரர்கள்.
ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல் ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.