2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய தொடக்க ஜோடி முதல்முறையாக 100 ரன் டெஸ்ட் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
பெர்த் டெஸ்ட்:
பெர்த் டெஸ்ட் போட்டி போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 150 ரன்களும் ஆஸ்திரேலிய 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் 46 ரன்கள் முன்னிலை பெற்றது.
முன்னதாக, இந்திய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தனது 11வது டெஸ்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையை சிதைத்தார். அவருக்கு உறுதுணையாக அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா சிறப்பாக பந்து வீசி டிராவிஸ் ஹேட்டின் முக்கியமான விக்கெட்டை எடுத்தார். ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸ்சில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, மிட்செல் ஸ்டார்க் (26 ), ஜோஷ் ஹேசில்வுட் (7 நாட் அவுட்) ஆகியோர் கடைசி விக்கெட்டுக்கு 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய பந்துவீச்சாளர்களை தலைவலி கொடுத்தனர்.
கே.எல் ராகுல்-ஜெய்ஸ்வால் அபாரம்:
இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சை ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் தொடங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 2004க்குப் பிறகு இந்தியாவின் தொடக்க ஜோடி ஒன்று 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பாக அமைத்தது . 2004 தொடரின் போது சிட்னியில் நடந்த டெஸ்டில் வீரேந்திர சேவாக் மற்றும் ஆகாஷ் சோப்ரா 123 ரன்கள் எடுத்தனர். அதன் பிறகு தற்போது தான் இந்தியாவின் தொடக்க ஜோடியான ராகுல்-ஜெய்ஸ்வால் ஆகியோர் 100 ரன்களை பார்ட்னர்ஷிப்பாக அமைத்துள்ளனர்.
இதையும் படிஙக: Tushar Deshpande: ”மும்பை அணிக்காக விளையாட தயார்” அப்போ சிஎஸ்கே? துஷார் தேஷ்பாண்டே பல்டி
தொடக்க ஆட்டக்காரர்களான கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 229 பந்துகளில் இந்த சாதனையை நிகழ்த்தினர். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்த ஆறாவது இந்திய ஜோடி என்ற பெருமையையும் பெற்றனர். இருவரும் அரைசதம் அடித்து நிதாமான ஆட்டதை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கான 100 ரன் தொடக்க பார்ட்னர்ஷிப்பின் முழு பட்டியல்:
- சுனில் கவாஸ்கர்/கே ஸ்ரீகாந்த் - 191 ரன்கள்- சிட்னி,1986 ஆம் ஆண்டு
- சுனில் கவாஸ்கர்/சேத்தன் சவுகான் - 165 ரன்கள், மெல்போர்ன்,1981 ஆம் ஆண்டு
- ஆகாஷ் சோப்ரா/வீரேந்திர சேவாக் - 141 ரன்கள், மெல்போர்ன்,2003 ஆம் ஆண்டு
- வினு மங்காட்/சாந்து சர்வதே - 124, ரன்கள், மெல்போர்ன்,1948
- ஆகாஷ் சோப்ரா/வீரேந்திர சேவாக் - 123, ரன்கள், சிட்னி,2004
- யஷஸ்வி ஜெய்ஸ்வால்/கேஎல் ராகுல் - பெர்த்,100* ரன்கள், 2024