மொஹாலி மைதானத்தில் நேற்று இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. கிரிக்கெட் போட்டியில் பல சமயங்களில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். அதுபோன்ற சம்பவம்தான் இந்தியா – ஆஸ்திரேலியா மைதானத்தில் அரங்கேறியுள்ளது.


அதாவது, 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் இலங்கை அணி நிர்ணியத்த 207 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 211 ரன்களை விளாசித்தள்ளி வெற்றி பெற்றது. இந்திய அணி இலங்கையை எவ்வாறு வீழ்த்தியதோ, அதேபோல இதே மொஹாலி மைதானத்தில் இந்திய அணி நிர்ணயித்த 209 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 211 ரன்கள் விளாசி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.




2009ம் ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி மொகாலியில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த இலங்கை அணி சங்கக்கரா, ஜெயசூர்யா, ஜெயசிங்கே அதிரடியால் 20 ஓவர்களில் 206 ரன்களை குவித்தது. 207 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சேவாக் மிரட்டலாக 64 ரன்களை எடுக்க, தோனி அதிரடியாக 46 ரன்களையும், யுவராஜ் அதிரடியாக 60 ரன்களையும் விளாச இந்திய அணி 19.1 ஓவர்களில் 211 ரன்களை குவித்து அபாரமாக வெற்றி பெற்றது.


இதே, மொகாலி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் அதிரடியால் இந்தியா 208 ரன்களை குவிக்க, 209 ரன்களை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா அணிக்கு 208 கிரீன், ஸ்மித், வேட் அதிரடியால் 19.2 ஓவர்களிலே 211 ரன்களை எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது.




இந்திய அணி 2009ம் ஆண்டு இதே மைதானத்தில் 207 ரன்கள் இலக்கை நோக்கி ஆடியபோது 5 பந்துகள் மீதம் வைத்து 211 ரன்களை விளாசி வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 209 ரன்களை நோக்கி ஆடியபோது 4 பந்துகள் மீதம் வைத்து 211 ரன்களை விளாசி வெற்றி பெற்றுள்ளது.


இதில், மிகப்பெரிய சுவாரஸ்யம் என்னவென்றால் நேற்றைய போட்டியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், 12 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போட்டியிலும் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக ஆடியுள்ளார். அந்த போட்டியில் ஒரு பந்தில் 4 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்றைய போட்டியில் 6 ரன்களை அடித்திருந்தார்.


மேலும் படிக்க : Smriti Mandhana : பேட்டிங் தரவரிசையில் அசத்தல் முன்னேற்றம்..! டி20, ஒருநாள் போட்டிகளில் ஸ்மிரிதி மந்தனா அபாரம்..!


மேலும் படிக்க :