2019 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட நாட்களாக இடம்பிடிக்காமல் தினேஷ் கார்த்திக் உள்ளார். அவர் சமீபத்தில் 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக இருந்து கோப்பையை வென்று தந்தார். அதன்பின்னர் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் விளையாடி இறுதிப் போட்டி வரை சென்றார். இந்தத் தொடரில் தினேஷ் கார்த்திக் சரியாக சோபிக்கவில்லை. 


இந்நிலையில் இந்தாண்டு நடைபெறும் உள்ளூர் டி20 போட்டியான சையத் முஷ்டாக் அலி தொடருக்கான தமிழ்நாடு அணியில் இருந்து அவர் விலகினார். இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியதாக கூறப்பட்டது. இந்தச் சூழலில் அவர் தற்போது தனக்கு குழந்தை பிறந்துள்ள அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, “3 பேராக இருந்த எங்களுடைய குடும்பம் தற்போது 5 பேராக மாறியுள்ளது. எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளனர். 






அவர்களுக்கு கபீர் பல்லிகல் கார்த்திக் மற்றும் ஸியான் பல்லிகல் கார்த்திக் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதைவிட நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைய முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். தினேஷ் கார்த்திற்கும் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது அந்த தம்பதிக்கு குழந்தைகள் பிறந்துள்ளது. தினேஷ் கார்த்திக்கின் இந்த பதிவை தொடர்ந்து அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்கள் என்று பலரும் தங்களுடைய வாழ்த்து செய்தியை பதிவிட்டு வருகின்றனர். 






















இவ்வாறு பலரும் அவர்களுக்கு இந்த தம்பதிக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க: ஹர்திக் பாண்டியா இப்படியா? ஃபிட்டா கெத்தா வந்துடேன்னு சொல்லு.. பிசிசிஐ போட்ட வைரல் ட்வீட் !