மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டிற்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். அதேபோல் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இப்படி நட்சத்திரங்களாக ஜொலிக்கும் கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் மட்டுமின்றி தனிபட்ட வாழ்க்கையில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு அதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகின்றனர். அந்தவகையில் பிஸினஸில் ஈடுபடும் கிரிக்கெட்டர்கள் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பர்ப்போம்:


சச்சின் டெண்டுல்கர்:


கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் பல்வேறு வணிக நிறுவனங்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டி வருகிறார். அந்தவகையில், ஸ்மாஷ் என்டர்டெயின்மென்ட், அனாகாடமி, ஸ்மார்ட்ரான், ஸ்பின்னி, ஜெட் சிந்தசிஸ் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.


எம்.எஸ் தோனி:


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் உலகக் கோப்பை நாயகன் எம்.எஸ்.தோனி பல்வேறு தொழிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில்,  கார்ஸ்24, கருடா ஏரோஸ்பேஸ், உடற்பயிற்சி ஸ்டார்ட் அப், டாக்டா ரஹோ, கதாபுக், சென்னையின் எஃப்சி, ஹோட்டல் மஹி ரெசிடென்சி, ஸ்போர்ட்ஸ்பிட், எம்.எஸ்.தோனி கார்24, ஹோம்லென், 7இங்க் பிரேவ்ஸ் பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்களை நடந்தி வருகிறார்.


விராட் கோலி:


கிங் கோலி என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் விராட் கோலி. இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவர். இவர் கோலி ரேஜ் காபி, ஃபிட்னஸ் சென்டர் சிசல், ப்ளூ ட்ரைப், WROGN, One8 போன்ற நிறுவனஙளை நடத்தி வருகிறார். ஏற்கனவே சமூக வலைதளங்களில் கோடிகணக்கில் பணம் ஈட்டும் கோலி ஒரு சிறந்த பிஸினஸ் மேனாகவும் திகழ்கிறார்.