இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தத் தொடரை இந்திய அணி ஏற்கெனவே 2-0 என்ற கணக்கில் வென்றுவிட்டது. இதன்காரணமாக கடைசி போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்து நடைபெற உள்ள இலங்கை டி20 தொடருக்கும் அவர்கள் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 


 


இந்நிலையில் விராட் கோலி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் படத்தை அவரை போல் நிறையே நபர்கள் உள்ளனர். அந்தப் படத்தில் யார் உண்மையானவர் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். 






 


அவரின் அந்தப் பதிவிற்கு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 









 






 




முன்னதாக நேற்று இலங்கை டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டார். இந்தத் தொடருக்கு வேகப்பந்துவீச்சாளர் பும்ரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் போது பும்ரா, ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரை தலைவர்களாக வளர்க்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: மீண்டும் இந்தியாவுக்கு விளையாடணுமா? ரஞ்சி தொடர்ல கெத்து காமிங்க..முக்கிய வீரர்களுக்கு செக் வைத்த பிசிசிஐ!