ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் பெயர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த 17 பேர் கொண்ட அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், சமூக ஊடகங்களில் அணி தேர்வுக்குப் பிறகு, மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து டாப் டிரெண்டிங்கில் உள்ளது.


அதற்கான காரணம், ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியில் மும்பை இந்தியன்ஸுடன் தொடர்புடைய 8 வீரர்கள் உள்ளனர். இந்த வீரர்கள் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவர்களும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு முறையாவது விளையாடியவர்களாகவும் இருந்துள்ளனர். அவர்கள் யார் யார் என்ற முழு விவரத்தையும் உங்களுக்காக கீழே..


இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா...


ஆசிய கோப்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவைத் தவிர, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கி கலக்கிய வீரர்கள். இது தவிர ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். இந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்த 17 பேர் கொண்ட இந்திய அணியில் மொத்தம் 8 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.


அக்சர் படேல், குல்தீவ் யாதவ் என்னது மும்பை இந்தியன்ஸா..?


இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் 2015 முதல் ஐபிஎல் 2021 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், இந்தியாவின் ஆல்-ரவுண்டர் அக்ஷர் படேல் ஐபிஎல் 2013 இல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். இதன் பிறகு அக்சர் படேல் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடினார். இது தவிர, சீனாமேன் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஐபிஎல் 2013 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தார். பின்னர் ஐபிஎல் 2014 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குல்தீப் யாதவை சேர்த்தது. தற்போது குல்தீப் யாதவ் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.


மும்பை என்னும் தாய் வீடு - சூர்யகுமார் யாதவ்


சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் 2011 முதல் ஐபிஎல் 2013 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால், அப்போது அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை. இருப்பினும், 2014 ஐபிஎல் ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் சூர்யகுமார் யாதவை எடுத்துக்கொண்டது. அதே நேரத்தில், இதற்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் ஏலத்தில் 2018, சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை இந்தியன்ஸில் இணைந்தார்.


2023 ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் ஜடேஜா, ரவீந்திர ஜடேஜா. , அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் (ரிசர்வ் விக்கெட் கீப்பர்).