பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஃபலோ ஆன்னை தவிர்த்து ஆட்ட நேர முடிவில் 252/9 ரன்கள் எடுத்தது.


பிரிஸ்பேன் டெஸ்ட்:


காபா டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் குவித்து அசத்தியிருந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சதமடித்தனர். அலேக் கேரி அரைசதம் அடித்திருந்தார். பும்ரா 6 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டும் ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் ரெட்டி தலா 1 விக்கெட் எடுத்தனர்.


இதையும் படிங்க: Ravindra Jadeja : வாள் தூக்கி நின்னான் பாரு! ஆஸ்திரேலியாவில் அசத்தும் ஜடேஜா.. போராடும் இந்திய அணி


போராடிய ராகுல், ஜடேஜா:


இந்திய அணியில் வழக்கம் போல ஜெய்ஸ்வால், கில், கோலி, பண்ட், ரோகித் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர், இதனால் இந்திய அணி 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தது. 






அதன் பிறகு நிதிஷ் ரெட்டி மற்றும் ஜடேஜா ஜோடி 53 ரன்கள் சேர்த்தது, இதனால் இந்திய அணி 200 ரன்களை கடந்தது, ஜடேஜாவும் அரைசதம் அடித்து 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.இந்தியன் அணி ஃபோல ஆன்னை தவிர்க்க 33 ரன்கள் தேவைப்பட்டது.


இதையும் படிச்சு பாருங்க: Watch Video : அது எப்படி திமிங்கலம் கீழ விழல! பந்து ஸ்டம்ப்பில் பட்டும், கீழே விழாத பெய்ல்ஸ்.. ஷாக்கான வீரர்கள்


மானத்தை காப்பாற்றிய் ஆகாஷ் தீப், பும்ரா:


இறுதி விக்கெட்டுக்கு களமிறங்கிய பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் திறமையாக விளையாடினர். குறிப்பாக பேட் கம்மின்ஸ்சின் ஓவரில் பும்ரா ஷார்ட் பந்தை சிக்சருக்கு தூக்கி பறக்கவிட்டார். 






அதன் பின்னர் ஃபலோ ஆன்னை தவிர்க்க 4 ரன்கள் தேவைப்பட்ட போது ஆகாஷ் தீப் பவுண்டரி அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி ஃபலோ ஆன்னை தவிர்த்தது, அதற்கு அடுத்த பந்தே ஆகாஷ் பேட் கம்மின்ஸ்சின் பந்தை சிக்சருக்கு தூக்கி விளாசினார், 






அதன் பின்னர் போதிய வெளிச்சமின்னையால் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 252/9 விக்கெட்டுகளை எடுத்தது. ஆகாஷ் 27 ரன்களுடனும், பும்ரா 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.