இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி சூர்யகுமார் அதிரடி அரைசதம், வெங்கடேஷ் அய்யர் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆட்டத்தை அதிரடியாகவே தொடங்கினர்.




கைல் மேயர்ஸ் 4 ரன்களிலும், ஷாய் ஹோப் 8 ரன்களிலும் தீபக் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தனர். ஆனாலும், கடந்த போட்டியில் இந்திய அணியை கதறவிட்ட பூரணும், ரோவ்மென் பாவலும் இந்த போட்டியிலும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கினர். ரோவ்மென் பாவெல் 14 பந்தில் 2 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷல் படேல் பந்தில் ஆட்டமிழந்தார்.




அடுத்து வந்த கீரன் பொல்லார்ட் 5 ரன்களிலும், ரோஸ்டன் சேஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனாலும், மறுமுனையில் தனி ஆளாக போராடிய நிகோலஸ் பூரண் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து கொண்டிருந்தார். தனி ஆளாக பொறுப்புடன் ஆடிய நிகோலஸ் பூரணும், ஷெப்பர்டும் இணைந்து ஜோடி சேர்ந்து இந்திய வீரர்களுக்கு பீதியை கிளப்பினர்.


இந்த நிலையில், அணியின் ஸ்கோர் 148 ஆக உயர்ந்தபோது, அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நிகோலஸ் பூரண் இஷான் கிஷானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 47 பந்தில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 61 ரன்கள் எடுத்திருந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில்  ஷெப்பர்டும் அவுட்டானார். அவர் 21 பந்தில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.  இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில்  9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர்ல வெங்கடேஷ் அய்யர், தீபக் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  




இந்த வெற்றி மூலம் இந்திய அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. ரோகித்சர்மா இந்தியாவின் முழுநேர ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலே இரு தொடரிலும் எதிரணியை ஒயிட்வாஷ் ஆக்கி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண