இந்திய ஆடவர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இந்திய ஆடவர் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகளில் தோல்வி அடைந்தது. இந்திய ஆடவர் அணி மிக மோசமாக ஆடி வரும் சூழலில், மகளிர் கிரிக்கெட் அணி அசத்தி வருகிறது.

Continues below advertisement

லார்ட்ஸ் வெற்றி:

மகளிர் அணியின் டி20 தொடரை 2-1 என்று இழந்தாலும், லார்ட்ஸ் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. மேலும், அன்னிய மண்ணிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கான தாெடக்கப்புள்ளியாகவும் இது கருதப்படுகிறது. 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆட்டம் கடந்த சில வருடங்களாகவே அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றதே அதற்கு சிறந்த சான்று ஆகும். மகளிர் ஐபிஎல்-க்கு கிடைக்கும் வரவேற்பும் அதற்கு மற்றொரு சான்றாகும்.

Continues below advertisement

அபாரம்:

இந்த சூழலில், லார்ட்ஸில் சொந்த மைதானத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணியை மூன்றே நாளில் சுருட்டி வீசி வெற்றி பெற்று அசத்தியுள்ளது இந்தியா. மகளிர் கிரிக்கெட் அணியின் விராட் கோலி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஸ்மிரிதி மந்தனா இரண்டு இன்னிங்சிலும் அசத்தலான அரைசதம் விளாசினார். முதல் இன்னிங்சில் 83 ரன்களும், 2வது இன்னிங்சில் 70 ரன்களும் விளாசினார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் ஆகியோரின் அபாரமான அரைசதமும் இந்தியாவின் வெற்றிக்கு தூணாக மாறியது.

இந்த வெற்றியில் மிக மிக முக்கியமான பங்களிப்பு செய்தது யஸ்திகா பாட்டீயா ஆவார். அவர் 158 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 113 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றியை இங்கிலாந்து பறிக்க முடியாததாக மாற்றினார்.

பவுலிங் அசத்தல்:

மையா பவுச்சர், ஹீதர் நைட், நாட் ஸ்கிவர் ப்ரன்ட், ஆலிஸ் கேப்சி, எமி ஜோன்ஸ் என்ற வலுவான பேட்டிங் கொண்ட இங்கிலாந்தை கிரன்டி கவ்த் சிதைத்தார். அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்த, இரண்டாவது இன்னிங்சில் ஸ்னேகா ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சயலி, கிரந்தி, தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி ஒரு அணியின் கூட்டு முயற்சியாக இந்த வெற்றியைப் பெற்றது.இந்திய அணி இந்த போட்டியில் 270 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இனி வரும் காலங்களில் இநதிய மகளிர் அணி இதுபோன்ற ஏராளமான வெற்றிகளைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம். லார்ட்ஸில் வெற்றி பெற்ற மகளிர் அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.