மகளிர் டி20 உலகக் கோப்பை:


மகளிர் டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி குரூப் ஏ பிரிவில் இன்று (அக்டோபர் 9) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாட உள்ளன. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. அதே நேரம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 105 என்ற சுமாரான இலக்கை துரத்திய இந்திய அணி 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. 


இந்திய அணியின் முக்கிய வீராங்கனைகள்:


ஸ்மிருதி மந்தனா: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா இன்னும் சிறந்த பார்மை எட்டவில்லை. ஆனாலும், பவர்ப்ளே ஓவர்களில் எதிரணியிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது.


ரேணுகா சிங் தாக்கூர்: ரேணுகா சிங் தாக்கூர் இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர். அவரது ஸ்விங்கும், ஆரம்ப விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனும் இலங்கையின் பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.


இலங்கை அணி:


அனுபவ வீரர்  சாமரி அத்தபத்துவின் தலைமையில் இலங்கை அணி களம் காண்கிறது. முன்னதாக இலங்கை அணின் தாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் இந்த போட்டியில் அந்த அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனாலும், ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது அவர்களுக்கு இந்த முறை தோல்வியில் இருந்து மீண்டு வர உதவும். அதபத்து மீண்டும் இலங்கையின் முக்கிய வீரராக களமிறங்குவார். அதே நேரம் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எடுப்பது இலங்கைக்கு சவாலாக இருக்கும்.


இலங்கை அணியின் முக்கிய வீரர்கள்:


சாமரி அதபத்து:இலங்கை அணியின் கேப்டன் சாமரி அதபத்து முக்கிய மானவீரராக இருக்கிறார். 


இனோகா ரணவீர: அனுபவம் வாய்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் இந்தியாவின் மிடில் ஆர்டரைக் கட்டுப்படுத்தும் பணியை மேற்கொள்வார், குறிப்பாக மிடில் ஓவர்களில் சிறப்பாக வீசி இந்திய வீராங்கனைகளை திணறடிக்க முடியும்.


இந்தியா பெண்கள் மற்றும் இலங்கை பெண்கள், டி20 உலகக் கோப்பை போட்டி எப்போது நடைபெறும்?


இந்தியா பெண்கள் மற்றும் இலங்கை பெண்கள், டி20 உலகக் கோப்பை போட்டி புதன்கிழமை (அக்டோபர் 9) நடைபெறுகிறது. இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்கும், டாஸ் IST இரவு 7:00 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.


இந்தியா பெண்கள் vs இலங்கை பெண்கள், டி20 உலகக் கோப்பை போட்டி எங்கு நடைபெறும்?


இந்தியா பெண்கள் மற்றும் இலங்கை பெண்கள், டி20 உலகக் கோப்பை போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது


இந்தியா பெண்கள் vs இலங்கை பெண்கள், டி20 உலகக் கோப்பை போட்டியின் நேரடி ஒளிபரப்பை எங்கே பார்ப்பது?


இந்தியா பெண்கள் vs இலங்கை பெண்கள், டி20 உலகக் கோப்பை போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பார்க்கலாம்.


இந்தியா பெண்கள் vs இலங்கை பெண்கள், டி20 உலகக் கோப்பை போட்டியின் நேரடி ஒளிபரப்பை எங்கே பார்ப்பது?


இந்தியா பெண்கள் vs இலங்கை பெண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியை ஹாட்ஸ்டாரில் நேரடியாக பார்க்கலாம்.